Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், “அன்பிலும் ஆனந்தத்திலும் விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான காலகட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனிதத் தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிரச் செய்திடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க காற்று மாசு ஒரு காரணமல்ல. நீங்கள் அவர்களுக்காக செய்யும் தியாகமாக, 3 நாட்களுக்கு அலுவலகத்துக்கு நடந்து செல்லுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட்டுடன் சேர்த்து வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. சிறுவனாக இருந்தபோது, பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. செப்டம்பரில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கிவிடுவோம். பண்டிகை முடிந்த பிறகும் பட்டாசுகளை பத்திரப்படுத்தி, வெடித்து மகிழ்வோம்.
யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, அவர்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்யுங்கள். பெரியவர்கள் பட்டாசு வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும்” என கூறிஉள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT