Published : 02 Nov 2021 12:26 PM
Last Updated : 02 Nov 2021 12:26 PM

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணி வாய்ப்பு: வைகோ வலியுறுத்தல்

சென்னை

சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு செய்த பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

2009, 10 மற்றும் 11ஆம் ஆண்டுகளில் திராவிடக் கழக ஆட்சிக் காலத்தில் 31,170 பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்தனர். இதில் 22,351 பேர் கலந்துகொண்டு 11,161 சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடித்த பணியில் சேர்க்கப்பட்டனர். அதிமுகவின் ஆட்சி மாற்றம் காரணமாக 2011ஆம் ஆண்டில் எஞ்சிய 11,190 பேரில் 340 பட்டதாரித் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் 23/06/2012 ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு பணி ஆணை வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, என்.சி.டி.ஈ என்னும் (National Council of Teacher Education) என்னும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு முறையை மத்திய அரசின் நடைமுறைக்குக் கொண்டு வந்ததால் ஆவணங்கள் சரிபார்ப்பு முடித்த 1258 பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் உட்பட 5000 பேர் பணி நியமனம் கிடைக்கப் பெறாமல் உள்ளனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 2012-ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் வயது மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.

இதனிடையே, நடப்பாண்டு அரசுப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்து இருப்பதாக, அரசு அறிவித்த நிலையில், புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் 2012ஆம் ஆண்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு ஏற்கெனவே காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்’’.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x