Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

விட்டு விட்டு மழை பொழிந்தாலும் தீபாவளிக்காக பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்

விட்டு விட்டு பெய்த மழையிலும் தீபாவளிக்காக பொருட்கள் வாங்க புதுச்சேரி காந்தி வீதியில் திரண்ட மக்கள் கூட்டம்.

புதுச்சேரி

விட்டு விட்டு பொழிந்த மழையி லும் தீபாவளியையொட்டி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் தீபாவளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க புதுச்சேரியில் முக்கிய வீதிகளான நேரு வீதி,காந்தி வீதி, அண்ணா சாலை, மிஷன் வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி யது. மேலும், சண்டே மார்க்கெட்டி லும், சாலையோர கடைகள் தொடங்கி அனைத்து கடைகளிலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு தேவையான அனைத்து உடைகள் மற்றும் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், ஆங்காங்கே போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் வருவதால் நேருவீதி மற்றும் காந்திவீதி களில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் மதியம் முதல் மழை விட்டு, விட்டு பொழிந்தாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.

தீபாவளியையொட்டி சாலை யோரத்தில் வியாபாரம் செய்வோர் மழையால் ஏற்பட்ட சிரமத்துக்கு மத்தியிலும் வியாபாரம் செய்வதில்மும்முரம் காட்டினர். கரோனா சூழலுக்கு பிறகு வியாபாரம் நன்குநடந்து வந்த சூழலில் மழைப்பொழிவு தங்கள் வர்த்தகத்துக்கு இடையூறு ஏற்படுவதாக சிறு வியாபாரிகள் குறைபட்டுக் கொண்டாலும், தார்பாய் கொண்டு மூடி பொருட்களை பாதுகாத்தபடியே வியாபாரம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x