Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM
பசும்பொன் தேவர் ஜெயந்திக்கு அதிவேகமாக சிலர் ஆர்ப்பரித்தபடி சென்ற வாகனங்கள், வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
பசும்பொன் தேவர் ஜெயந்தியை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 186 வழித்தடங்களின் வழியாக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் 148 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் 900 இரும்பு உலோகத் தடுப்புகளை வைத்து 8 ஆயிரம் போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று பசும்பொன்னுக்கு வாகனங்களில் சென்ற சிலர் மது போதையிலும், அதிவேகமாகவும், வாகனங்களின் மேற்கூரையிலும், பக்கவாட்டிலும் தொங்கிக் கொண்டு ஆர்ப்பரித்த படி சென்றனர். இதனால் ராமநாத புரம் அருகே நதிப்பாலம், சடைய னேந்தல் மற்றும் பரமக்குடி ஆகிய இடங்களில் நடந்த 3 விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பெருங்குளத்திலிருந்து காரில் சென்ற கருணாகரன் மகன் விக்னேஸ்வரன் (21) மற்றும் மதுரையில் இருந்து காரில் சென்ற மதிச்சியத்தைச் சேர்ந்த வசந்த் (29) எனத் தெரியவந்தது. மேலும் இருவர் காயமடைந்தனர்.
இதனிடையே பசும்பொன் மற்றும் கமுதி அருகே காவல் துறை மற்றும் வருவாய்த் துறை வாகனங்களின் மீது ஏறி நட னம் ஆடிய இளைஞர்களை வீடியோ மூலம் அடையாளம் கண்டு அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT