Last Updated : 16 Mar, 2016 08:25 AM

 

Published : 16 Mar 2016 08:25 AM
Last Updated : 16 Mar 2016 08:25 AM

கலப்புத் திருமணம் செய்துகொண்டவர் படுகொலை சம்பவம்: உடலை எரிக்க உறவினர்கள் எதிர்ப்பு - நள்ளிரவில் போலீஸ் தடியடி; தெருவுக்குத் தெரு போலீஸ் பாதுகாப்பு

உடுமலையில் காதல் திருமணம் செய்துகொண்ட மாணவர் கொலை சம்பவத்தில், அவரது சடலத்தை எரிக்க உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸார் நள்ளிர வில் தடியடி நடத்தினர்.

கலப்புத் திருமணம் செய்த கார ணத்துக்காக நடைபெற்ற கொடூர மான கவுரவக் கொலையில் கல்லூரி மாணவர் சங்கர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.

இதனைத் தொடர்ந்து, குமரலிங் கத்தில் உள்ள மயானத்தில் சட லத்தை எரிக்க தேவையான ஏற்பாடு களை போலீஸார் செய்திருந்தனர். அதற்கு அங்கு கூடியிருந்த உறவி னர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். ‘சடலத்தை எரிக்கக் கூடாது. உறவினர்கள் வர வேண்டியுள் ளது, சங்கரின் மனைவியும் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

இதற்கு அனுமதி இல்லை என போலீஸார் கூறியதால், சட லத்தை எரிப்பதற்காக அடுக்கி வைக் கப்பட்டிருந்த விறகுக் கட்டை களுக்கு தீ வைக்கப்பட்டது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மின் விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியதில் சங்கரின் உறவினர்கள், கும்மிருட்டில் சிதறி ஓடினர். அதில், பெண்கள், முதியவர்களுக்கும் அடி விழுந்தது. சில பெண்கள் காயமடைந்தனர்.

பின்னர், சங்கரின் தந்தை, உடன் பிறந்த மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஒரு சிலர் முன்னி லையில் மாணவரின் சடலத்தை போலீஸாரே அடக்கம் செய்தனர். இச்சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக சிலரை கைது செய்த போலீஸார் அதிகாலையில் விடுவித்தனர்.

தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல் உட்பட பல் வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீ ஸார் அங்கு தெருவுக்குத் தெரு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

மாணவர் படுகொலை சம்ப வத்தையடுத்து நேற்று 2-வது நாளாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ள தால், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 4 பேருக்கு மேல் கூடி நின்றால், அவர்களைக் கலைந்து செல்லும்படி போலீஸார் எச்சரித்து வருகின்றனர். அதனால் அங்கு அறி விக்கப்படாத ஊரடங்கு அமலில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

போலீஸார் நடத்திய தடியடி யில் காயம் அடைந்தவர்கள் அங் குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தனியார் மருத்துவ மனைகளிலும் முதலுதவி சிகிச்சை பெற்றனர். போலீஸார் கெடுபிடி காரணமாக பலரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் அச்சத்துடன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x