Published : 15 Mar 2016 02:37 PM
Last Updated : 15 Mar 2016 02:37 PM
சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கும், அன்புமணிக்கும்தான் போட்டி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் பாமக பொதுக்கூட்டம் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி வந்துள்ள ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ''தமிழகத்தில் 6 முனைப்போட்டி என்று சொல்கிறார்கள். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கும், அன்புமணிக்கும்தான் போட்டி. பாமகவுக்கு பெண்கள் ஓட்டு அதிகம்.
பாமக தலைமையிலான கூட்டணிக்கு கட்சிகள் வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
நாங்கள் அறிவித்த மதுவிலக்கு கொள்கையைத்தான் இன்று சில கட்சிகள் காப்பி அடித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் 46.41 கோடி மதிப்பில் 9 சாலை திட்டங்கள் ஒப்பந்தம் கிடப்பில் கிடக்கிறது. 2011-ல் 4,974 கி.மீ. தூரம் மாநில நெடுஞ்சாலை துறையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்போது இதன் தூரம் 5,004 கி.மீ. தூரம் மட்டுமே அதிகரித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் 30 கி.மீ. சாலைகள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 10,000 கோடி ரூ மதிப்பில் சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
நிலத்தை கையகப்படுத்துவதில் தொடங்கி அனைத்து மட்டங்களிலும் ஊழல் தொடர்கிறது.
தமிழக விவசாயிகள் தற்கொலைகளை கண்டிக்கிறோம்'' என்று ராமதாஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT