Published : 17 Mar 2016 09:16 AM
Last Updated : 17 Mar 2016 09:16 AM
தமாகாவுக்கு சாதகமான 65 தொகுதிகளை ஜி.கே.வாசன் தேர்வு செய்து வைத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 32 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்க திட்டமிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை தனது முதல் விருப்பமாக வைத்திருக் கிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். எனினும், அதிமுக தரப்பில் இருந்து அழைப்பு வருவதில் தாமதமானதால், திமுக பக்கம் பேசிப் பார்க்கலாம் என கட்சியில் ஒரு பிரிவினர் வாசனுக்கு யோசனை தெரிவித்தனர். ஆனால், வாசனும் ஞானதேசிகனும் திமுக அணியை விரும்பவில்லை. இந்நிலையில், தற்போது அதிமுக தரப்பில் இருந்து தமாகாவுடன் பூர் வாங்க பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதால் அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமாகாவின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர் கூறியதாவது:
கடந்த 1996-ல் திமுகவின் வெற் றிக்கு கைகொடுத்த மூப்பனார், 2001-ல் அதிமுக வெற்றிக்கு அடித்தள மாக இருந்தார். அப்போது மூப்பனார் வீட்டுக்கே நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார் ஜெயலலிதா. அந்த நேரத்தில் சோ.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் போன்ற வர்கள் அதிமுக தரப்பில் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டாலும் மற்ற முக்கியத் தகவல்கள் உள்ளிட்ட பரிமாற் றங்களை வாசன் மூலமாக ரகசியமாக செய்து முடித்தார் மூப்பனார்.
இப்போது மீண்டும் தமாகாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படுகிறது. கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று அதி முக தரப்பில் பேசுகிறார்கள். தொடக் கத்தில், 9 தொகுதிகள் என்ற அளவில் பேசினர். கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டுமானால் குறைந்தது 24 தொகுதிகளாவது தேவைப்படும் என்று அப்போது எங்கள் தரப்பில் சொல் லப்பட்டது. அத்துடன் பேச்சுவார்த்தை தடைபட்டுவிட்ட நிலையில், இப்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது.
மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணியினர், பெண்கள், தலித்கள், சட்டசபை அனுபவம் பெற்றவர்கள் ஆகியோ ருக்கு சம விகிதத்தில் தேர்தலில் வாய்ப்பளிக்க முடிவெடுத்திருக்கும் வாசன், அதற்கு ஏதுவாக வருவாய் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி வீதம் 32 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்கும் திட்டத்தில் இருக்கிறார். இதற் காக தமாகாவுக்கு சாதகமான 65 தொகுதிகளையும் அவர் தேர்வு செய்து வைத்திருக்கிறார். தலைமை யின் விருப்பம் இதுவாக இருந்தாலும் அதிமுக அணியில் 20 தொகுதிகள் கிடைத்தாலும் அத்தனையிலும் ஜெயித்துவிடலாம் என எங்கள் கட்சி யினர் இப்போது மகிழ்ச்சியில் உள்ளனர். அநேகமாக மார்ச் 18 அல்லது 23-ம் தேதி தமாகா தலை வரை ஜெயலலிதா அழைத்துப் பேசு வார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT