Last Updated : 27 Jun, 2014 03:44 PM

 

Published : 27 Jun 2014 03:44 PM
Last Updated : 27 Jun 2014 03:44 PM

புறநகர் ரயில் சீசன் டிக்கெட் கட்டண உயர்வு பெருமளவு குறைப்பு: புறநகர் பகுதியில் 2-ம் வகுப்பு கட்டண உயர்வு ரத்து

மத்திய அரசு அறிவித்தபடி, எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு கட்டண உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத வகுப்பு மற்றும் புறநகர் ரயில் கட்டண உயர்வு வரும் 28-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. புறநகர் பகுதிகளில் மட்டும் 2-ம் வகுப்பு கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு குறைப்பு

சென்னையில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, வேளச்சேரி வரையிலும், சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி வரையிலும் புறநகர் ரயிலில் 2-ம் வகுப்பில் செல்கிற பயணிகளுக்கு கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அனைத்து வகுப்புகளுக்கான ரயில் கட்டண உயர்வு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. புறநகர் ரயில் கட்டணமும், சீசன் டிக்கெட்டும் கடு மையாக உயர்த்தப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், புற நகர் பகுதிகளில் மட்டும் 2-ம் வகுப்பு கட்டணம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட புற நகர் ரயில் கட்டணம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

முதலில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டபோது புறநகர் ரயில் 2-ம் வகுப்புக்கான சீசன் டிக்கெட் கட்டணம் இருமடங்கும், முதல் வகுப்பு கட்டணம் 4 மடங்கும் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வை ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை திடீரென திருத்தி அமைத்தது. அதன்படி, புறநகர் ரயில் சீசன் டிக்கெட் கட்டணம் 14.2 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முன்பு அறிவித்ததை விட பெரு மளவு கட்டண உயர்வு குறைக்கப்பட்டிருக்கிறது.

புறநகர் பகுதி மற்றும் புறநகர் அல்லாத பகுதி

புறநகர் பகுதி மற்றும் புறநகர் அல்லாத பகுதி என இரண்டு விதமாக கட்டணம் நிர்ணயிக்கப்படு கிறது. அதன்படி, சென்னையிலி ருந்து 42 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள திருவள்ளூர், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கல்பட்டு, 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்மிடிப் பூண்டி, 20 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள வேளச்சேரி ஆகியவை புறநகர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்குள் புறநகர் ரயிலில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய கட்டண உயர்வு இல்லை. இந்தப் பகுதிகளைத் தாண்டி செல்வோருக்கு புறநகர் அல்லாத பகுதிக்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.

புதிய கட்டண விபரங்கள்

புதிய கட்டண உயர்வின்படி, சென்னை டெல்லி ராஜதானி எக்ஸ் பிரஸில் மூன்றடுக்கு ஏசி கட்டணம் ரூ.2,710, இரண்டடுக்கு ஏசி கட்டணம் ரூ.3,775, முதல் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.6,270, சென்னை டெல்லி ஏழைகள் ரதம் (கரீப் ரத்) கட்டணம் ரூ.1,365, சென்னை மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸில் ஏசி சேர்கார் (இருக்கை வசதி) ரூ.915, உயர்வகுப்பு ரூ.1,805, சென்னை கோவை சதாப்தி எக்ஸ் பிரஸில் ஏசி சேர்கார் ரூ.960, உயர்வகுப்பு ரூ.1,870-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸில் 2-ம் வகுப்பு இருக்கை கட்டணம் ரூ.180, ஏசி சேர் கார் ரூ.655, சென்னை திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸில் 2-ம் வகுப்பு இருக்கைக் கட்டணம் ரூ.165, ஏசி சேர்கார் ரூ.590, சென்னை பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் 2-ம் வகுப்பு இருக்கை ரூ.150, சென்னை கோவை எக்ஸ்பிரஸில் 2-ம் வகுப்பு இருக்கைக் கட்ட ணம் ரூ.180, ஏசி சேர்கார் ரூ.655 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

பயணிகளிடம் கூடுதல் வசூல்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன் பதிவு டிக்கெட் கட்டண உயர்வு புதன்கிழமை அமல்படுத்தப்பட்ட தால் கூடுதல் கட்டணத்துக்கான தொகையை ஓடும் ரயிலில் பயணி களிடம் இருந்து டிக்கெட் பரிசோத கர்கள் வசூலித்தனர்.

பயணிகளிடம் கட்டண உயர்வை நிதானமாக எடுத்துரைத்து கூடுதல் தொகையை வசூலிக்க வேண்டும் என்று டிக்கெட் பரிசோதகர்களை அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அதிகாரி கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x