Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் புகார்களை வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார குவியலுக்கு மேல் பழைய செய்தித்தாள்களை கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்தாலோ, தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமேபயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிட பயன்படுத் துவது கண்டறியப்பட்டாலோ ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை வடிகட்டி திரும்பத்திரும்ப இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரிக்கப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்புகளை தயாரிக்க அனுமதிக்கப்பட்ட நிற மிகளை, இனிப்பு வகைகளில் அளவுக்கு அதிகமான நிறமிகள்சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப் பட்டால் சட்ட ரீதியான உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்படும். பகுப்பாய்வக அறிக்கையின் அடிப்படையில் உணவு வணிகரின் மீது நட வடிக்கைஎடுக்கப்படும்.
பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை களை தனியாக வைக்க வேண்டும்.
பால் சார்ந்த இனிப்பு வகைகளின் உபயோகிக்கும் கால அளவை லேபிளில் அச்சிட வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகளை பொட்டலம் செய்து விற்கும்போது அவற்றின் தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், பேட்ச் எண், தயாரிப்பாளர் முகவரி, உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம்மற்றும் பதிவு எண் ஆகியவற்றை அதில் அச்சடித்து விற்பனை செய்யப்பட வேண்டும். இதுதொடர்பான புகார்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT