Published : 25 Oct 2021 12:29 PM
Last Updated : 25 Oct 2021 12:29 PM
நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 20 என்ற அளவிலேயே உள்ளது. கரோனா பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் உதகையில் அலைமோதுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பிய போது, அவரை வழியனுப்பவும் ஆட்சியர் வரவில்லை. அவரது மகனுக்கு கரோனா உறுதியானதால், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கரோனா உறுதியாகி உள்ளது.
தொற்று உறுதியானதையடுத்து பிங்கர்போஸ்ட் அருகே உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT