Published : 25 Oct 2021 03:11 AM
Last Updated : 25 Oct 2021 03:11 AM

இன்றைய இளைஞர்களுக்கு திராவிடத்தை சொல்லி கொடுக்காதது நமது தவறு தான்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆதங்கம்

‘நீட்’ ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் துரைமுருகன் நூல்களை வெளியிட்டார். அருகில், திராவிட இயக்க தலைவர் வீரமணி உள்ளிட்டோர்.

வேலூர்

இன்றைய இளைஞர்களுக்கு திரா விடத்தை சொல்லிக் கொடுக் காதது நமது தவறு தான் என நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

‘நீட்’ தேர்வு ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா வேலூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட திராவிட இயக்கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். திராவிட இயக்கத்தின் தலைவர் வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழக நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘கற்போம் பெரியாரியம் உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டு பேசும் போது, "திராவிடம் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு அதைசொல்லிக்கொடுக்காதது நமது தவறு தான். தந்தை செய்த தொழிலை மகன் செய்த நிலை மாறியதற்கு திராவிடம் முக்கிய காரணம் ஆகும். சுய மரியாதை மூலம் நமக்கு பல உரிமைகள் கிடைத்தன. இதை யாரும் மறக்கக் கூடாது. பெரியாரை மறந்தால் தமிழினம் அழியும்.

வேலூர் மாவட்டத்துக்கும் திராவிடக்கழகத்துக்கும் நீண்ட தொடர்பு உண்டு என்பதை யாரும்மறக்கக்கூடாது. வேலூரில் காந்தியடிகள் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் அண்ணா, ‘மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மனம் உண்டு’ என பேசினார். இப்படி பல வரலாற்று நிகழ்வுகள் வேலூரில் நடந்துள்ளன.

திராவிடக்கழகத்தினால் பிறமாவட்டங்களுக்கு இல்லாத உரிமை வேலூர் மாவட்டத்துக்கு மிக அதிகமாக கிடைத்துள்ளது. இதை இன்றைய இளைஞர்கள் மறந்து விடக்கூடாது’ என்றார். இதைத் தொடர்ந்து, ‘நீட்’ ஒழிப்பு ஏன்? எதற்காக என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வேலூர் எம்.பி., கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), அமலு (குடியாத்தம்), மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x