Last Updated : 22 Mar, 2016 05:52 PM

 

Published : 22 Mar 2016 05:52 PM
Last Updated : 22 Mar 2016 05:52 PM

நெல்லை மாவட்ட தொகுதிகளுக்கான நேர்காணலுக்கு அழைப்பின்றி அதிமுக நிர்வாகிகள் ஏமாற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இம்முறை அதிமுக அணியில் புதுமுகங்களே களமிறங்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

நேர்காணலுக்கு ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப் பட்டுள்ளதால் விருப்பமனு தாக்கல் செய்து காத்திருந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 6 என்று மொத்தம் 22 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட தொகுதிக்கு குறைந்தது 100 பேர், அதிகபட்சம் 150 பேர் என்று ஏராளமான நிர்வாகிகளும், அவர்களது வாரிசுகளும் தலைமை யிடம் விருப்ப மனு அளித்தி ருந்தனர். இந்த 22 தொகுதிகளிலும் 2,500 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர்.

நிர்வாகிகள் ஏமாற்றம்

இந்நிலையில் நேற்றுவரை அவர்களில் சிலரை மட்டுமே அதிமுக தலைமை அழைத்து நேர்காணலை நடத்தியுள்ளது. ஒரு சில தொகுதிகளுக்கு யாரையும் நேர்காணலுக்கு அழைக்கவில்லை. இதனால் இத் தொகுதிகளில் வேட்பாளரை அதிமுக தலைமை முடிவு செய்துவிட்டதாக அக்கட்சி யினர் கருதுகின்றனர். ஒருசிலர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக் கப்பட்டுள்ளதால், மனு தாக்கல் செய்திருந்த பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதி களில் திருநெல்வேலி, பாளையங் கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் யாரும் நேர்காணலுக்கு அழைக்கப் படவில்லை.

நேர்காணலில் பங்கேற்றோர்

மற்ற தொகுதிகளில் சங்கரன்கோவில் தொகுதிக்கு நகராட்சித் தலைவர் ராஜலட்சுமி, தென்காசி தொகுதிக்கு புறநகர் மாவட்ட பாசறை செயலாளர் சேர்மபாண்டி, ஒன்றியச் செயலாளர் சங்கரபாண்டியன், வாசுதேவநல்லூர் தொகுதிக்கு மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட கவுன்சிலர் மனோகர், ராதாபுரம் தொகுதிக்கு ஒன்றியச் செயலாளர் பால்துரை, லாரன்ஸ், நாங்குநேரி தொகுதிக்கு மாவட்டக் கவுன்சிலர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் விஜயகுமார், ஆலங்குளம் தொகுதிக்கு ஹெப்சி, கே.பி.ராமலிங்கம், கடையநல்லூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியனின் மகன் அய்யப்பராஜா, பொய்கை மாரியப்பன் உள்ளிட்டோர் நேர்கா ணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நேர்காணலுக்கு அழைக்கப் படாத திருநெல்வேலி தொகுதி யில் தற்போதைய எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், அம்பாசமுத்திரம் தொகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் முருகையாபாண்டியன், பாளையங்கோட்டை தொகுதியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகி யோர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் படலாம் என்று தெரிகிறது.

மொத்தத்தில் இம்முறை திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகளில் புதுமுகங்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்று அதிமுக வட்டாரத்தில் கருத்து தெரிவிக் கின்றனர்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் முருகையாபாண்டியன், பாளையங்கோட்டை தொகுதியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகி யோர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் படலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x