Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM
மதுரைக்காக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறைக்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டுக்கு தொகுதிகளுக்கிடையே பாரபட்சம் காட்டிவிட்டு நியாயம் கேட்கலாமா? என அமைச்சர் பி.மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உட்பட 4 பேர் பங்கேற்றனர்.
இதில் பேசியது மற்றும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து ஆர்.பி.உதய குமார் கூறியதாவது: மதுரை-நத்தம் இடையே மேம் பாலம், வைகை ஆற்றின் குறுக்கே 3 பாலங்கள், காளவாசல் சந்திப்பு மேம்பாலம், கப்பலூர்-உத்தங்குடி இடையே நான்குவழிச் சாலையாக மாற்றம், வாடிப்பட்டி-சிட்டம்பட்டி, மேலூர் காரைக்குடி இடையே நான்குவழிச் சாலை எனப் பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்ட ங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் எய்ம்ஸ், பெரியார் அணை யில் இருந்து நேரடியாகக் குடி நீர் விநியோகிக்கும் திட்டம், அரசு மருத்து வமனை விரிவாக்கம் என ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட் டுள்ளன. தற்போது ஆலோசிக்கப்படும் மாஸ்டர் பிளான் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கும்போது அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு எந்த வகையிலும் பாரபட்சம் காட்டக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: அதிமுக ஆட்சியில் சிங்கப் பூராக, மலேசியாவாக மாற்றுவோம் என் றனர். அப்படி மாறியுள்ளதா, என்ன திட்டம் வந் துள்ளது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். ஆலோசனைக் கூட்டத்தில் உதயகுமார் அரசியல் எண்ணத்துடன் பேசினார். நாங்கள் எவ்வித அரசியலும் இல்லாமல், அனைத்துக் கட்சியினரையும் இணைத்து மதுரையை மிகப் பெரிய முன்னேற்றத்துக்கு கொண்டு வருவோம். கடந்த ஆட்சியின்போது தேர்தலுக்கு முன்னதாக, மதுரை மாவட்டத்துக்கு வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக வழங்கப் பட்ட ரூ.100 கோடியை உதயகுமார் தனது தொகுதியான திருமங்கலத்துக்கு கொண்டு சென்றார். மற்ற தொகுதிகளுக்கு ஒரு சில கோடிகள் மட்டுமே வழங்கப்பட்டன. முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் திருமங்கலம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட அளவுக்குத்தான் இதர 9 தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து உதய குமாரிடமும் கேட்டுவிட்டேன்.
அவர்தான் பாரபட்சமாக செயல்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் எதிலுமே பாரபட்சம் இருக்காது. மதுரை மாவட்டத்தை முன்னேற்றவே மாஸ்டர் பிளான் திட்டம். இத்திட்டம் உள்ளிட்ட எதிலும் அரசியல் பாகுபாடு இருக்காது. அனைத்து திட்டங்களும் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைக்குப் பிறகே நிறைவேற்றப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT