Published : 19 Mar 2016 08:41 AM
Last Updated : 19 Mar 2016 08:41 AM
எங்களை திமுக கூட்டணியில் சேரவிடாமல் சதி நடப்பதாக நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் சந்தேகம் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இணைவ தற்கு தீர்மானித்திருக்கும் கார்த்திக், வியாழக்கிழமை அறிவாலயம் வருவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய நாமக நிர்வாகிகள், “திமுகவுடன் கடந்த ஒரு மாதமாக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறது. விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வராமல் போனதால் கேட்டது கிடைக்கும் என்றாலும் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வது என்ற முடிவில்தான் கார்த்திக் இருக்கிறார்.
இந்த மன நிலையோடுதான் வியாழன் அன்று அறிவாலயம் புறப் பட்டார். ஆனால், பாதி வழியில் செல்லும்போது திமுக தரப்பிலிருந்து மாறுபட்ட கருத்துச் சொல்லப்படுவ தாக தகவல் வந்ததால் மீண்டும் ஓட்டல் அறைக்கே திரும்பிவிட்டார். திமுக இன்னும் எங்களோடு தொடர்பில்தான் இருக்கிறது” என்று சொன்னார்கள்.
‘யாரோ உங்களை பாதி வழியில் கடத்திவிட்டதாகச் சொல் கிறார்களே?’ என்று கார்த்திக்கிடம் கேட்டபோது, “இது அப்பட்டமான வதந்தி. என்னை யாரும் கடத்த வில்லை; கடத்தவும் முடியாது. கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தைகள் சுமூகமாக போய்க் கொண்டிருந்த நிலையில், யாரோ திட்டமிட்டு, முரண்பட்ட தகவலை தந்து குழப்பத்தை ஏற்படுத்திவிட் டார்கள். நாங்கள் திமுக கூட்டணியில் சேரக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறதோ என்று நான் சந்தேகிக்கிறேன்’’ என்று சொன்னார்.
இதனிடையே நேற்று, நாமக-வின் ஒன்பது மாவட்ட நிர்வாகிகளோடு ஓட்டல் அறையில் ஆலோசனையும் நடத்தினார் கார்த்திக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT