Published : 20 Oct 2021 03:09 AM
Last Updated : 20 Oct 2021 03:09 AM

மதுவுக்கு அடிமையான மகனால் விபரீதம்: கடலூரில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் கொலை

கடலூர் ஆனைக்குப்பம் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). துணை ஆட்சியராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவிசரஸ்வதி. கடந்த ஒரு ஆண் டுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் வெளிநாட்டில் உள்ளார். ஒரு மகன் பெங்களூருவிலும், மற் றொரு மகன் சென்னையிலும் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான இளைய மகன் கார்த்திக் (38) தந்தை சுப்ர மணியத்துடன் கடலூரில் இருந்து வந்தார்.

மது பழக்கத்துக்கு அடிமையான கார்த்திக் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு தந்தை யிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் தனது தந்தையிடம் குடிக்க பணம்கேட்டுள்ளார். அவர் தர மறுத் துள்ளார். ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த இரும்பு ராடால் தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வெளியே சென்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தகார்த்திக் படுத்து உறங்கியுள்ளார். இரவு சுமார் 7 மணியளவில் எழுந்த அவர் வெளியே சென்று அக்கம் பக்கத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் தனது தந்தை தூங்கிக் கொண்டிருப்பதாகக் கூறி சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் சுப்ரமணியன் வெளியே வராத தால் இரவு சுமார் 10 மணியளவில் அக்கம் பக்கத்தினர் சுப்ரம ணியத்தின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அவர் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் காவல்நிலையத்திற்கு தக வல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீஸார் உடலைகைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, மஞ்சக்குப்பம் மைதானம் பகுதியில் மறைந்திருந்த கார்த்திக்கை போலீ ஸார் பிடித்து விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று மாலை போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கார்த்திக் மனநிலை பாதித்தவர் போல உள்ளார் என்றும், கார்த்திக் அவரது அறையில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களை அடிக்கி வைத்துள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x