Published : 20 Oct 2021 03:10 AM
Last Updated : 20 Oct 2021 03:10 AM

மதுரையை தொழில் நகரமாக்க `மாஸ்டர் பிளான்' திட்டம்: 2 அமைச்சர்கள் இன்று முக்கிய ஆலோசனை

மதுரை

மதுரையை தொழில் வளமிக்க மாவட்டமாக மாற்ற `மாஸ்டர் பிளான்' திட்டத்தை செயல்படுத் துவது குறித்து அமைச்சர்கள் தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய ஆலோ சனை நடக்கிறது.

மதுரையை தொழில் நகரமாக்க வேண்டும் என பல்வேறு தரப்பி லிருந்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கோரிக் கைகள் வைக்கப்பட்டு வரு கின்றன. எனினும் முக்கிய திட்டங் களோ, தொழிற்சாலைகளோ தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமை யவுள்ளது.

குடியிருப்புகளை விரிவுபடுத்த உதவும் எனக் கருதப்பட்ட உத்தங் குடி-சமயநல்லூர் சுற்றுச்சாலை இணைப்புத்திட்டம் கைவிடப் பட்டுவிட்டது.

உத்தங்குடி-கப்பலூர் இடையே 4 வழிச்சாலை கடந்தாண்டுதான் அமைக்கப்பட்டதால் இப்பகுதியில் சில கட்டுமானங்கள் உருவாகி வருகின்றன. நத்தம் வரை 4 வழிச்சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. வாடிப்பட்டி-சிட்டம் பட்டி 4 வழிச்சாலைப் பணியும் தொடங்கியுள்ளது.

இத்திட்டங்கள் நிறைவடையும் போது இப்பகுதிகள் வளர்ச்சி அடையும்.

மதுரையின் வடக்குப் பகுதி யில் சாலைகள் உருவாகும் அளவுக்கு பிற பகுதிகளில் இல் லை. இப்பகுதியில் அதிகளவு நிலங்கள், கிராமப்புறங்கள், மனித வளங்கள் உள்ளன. சென்னைக்கு அடுத்து கோயம்புத்தூர்தான் தொழில் நகராகத் திகழ்கிறது. இதற்கு திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களின் இணைப்பும், தொடர்பும் முக் கியக் காரணம். இதுபோன்ற சூழலை உருவாக்கினால்தான் மதுரையை மிகப்பெரிய தொழில் நகராகவும் மாவட்டம் முழுவதும் தொழில் வளமாக்கவும், சிறந்த விரிவாக்கக் குடியிருப்புப் பகுதி களாகவும் மாற்ற முடியும். இதைக் கருத்தில்கொண்டே 2003-ல் `மாஸ்டர் பிளான்' திட்டம் உரு வாக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: மதுரை யைச் சுற்றி 15 கிமீ சுற்றளவில் 4 வழி அல்லது 6 வழி சுற்றுச்சாலை அமைப்பதே `மாஸ்டர் பிளான்' திட்டத்தின் நோக்கம். வடக்கே சத்திரப்பட்டி, கிழக்கே வரிச்சியூர், தெற்கே மேலக்கோட்டை, மேற்கே செக்கானூரணி வரை யில் இந்தச் சாலைகளின் எல்லைகள் விரிவடையும். இந்தச் சாலைக்குள்ளும் அதை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்பு மனைகள், தொழிற்கூடங்களை உருவாக்கும் வகையில், நிலத்தின் வகைப்பாட்டில் மாற்றம் கொண்டு வரப்படும். இப்பகுதிக்குட்பட்ட நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற உடன் அனுமதி வழங்கப் படும்.

சிப்காட் போன்று 2 தொழிற் கூடங்கள் உருவாக்கப்படும். இதற்குத் தேவையான நிலங்கள் தாராளமாகக் கிடைக்கும். குறைந்த மதிப்பில் நிலம் கிடைப்பதுடன் நில உரிமையாளர்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும். இங்கு குடியிருப்புகள் உருவாகும் போது மாநகரில் நெரிசல் குறையும். தொழில்நிறுவனங்கள் உருவாவதால் கிராமங்களை மையப்படுத்தி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

15 கிமீ சுற்றுச்சாலை 4 திசை களிலுள்ள பிரதானச் சாலைகளை இணைக்கும்.

எந்தப் பகுதியிலிருந்தும் மற்றொரு பகுதிக்கு மதுரையைக் கடக்காமலேயே செல்லலாம்.இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

திட்டங்களை, எந்தெந்தத் துறைகள் மூலம் செயல்படுத் தலாம் என அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து வர்த்தக சங்கங்கள், உள்ளிட் டோருடன் ஆலோசனை நடத்தப் படும். இதில் எடுக்கப்படும் முடி வுகள் அரசிடம் தெரிவித்து திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x