Published : 18 Oct 2021 03:23 PM
Last Updated : 18 Oct 2021 03:23 PM
தமிழத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும், 4 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (அக்.18) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"1. சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பதவி வகித்துவரும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள சங்கர் ஜிவால், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்து வரும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஏ.கே.விஸ்வநாதன், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
3. சிவில் சப்ளை சிஐடியாகப் பதவி வகித்து வரும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஆபாஷ்குமார், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
4. உளவுத்துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள டி.வி.ரவிச்சந்திரன், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
5. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக உள்ள ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகர்வால், டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
6. சென்னை தலைமையக ஏடிஜிபி கே.ஷங்கர், நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7. சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் ஜி.வெங்கடராமன், சென்னை தலைமையக ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. தொழில்நுட்ப சேவைப் பிரிவின் ஏடிஜிபியாகப் பதவி வகித்துவரும் அமரேஷ் பூஜாரி, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. மாநிலக் குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் வினித் தேவ் வாங்க்டே, தொழில்நுட்ப சேவைப் பிரிவு ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார்.
10. சென்னை குற்றப்பிரிவின் ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் மகேஷ் குமார் அகர்வால், செயலாக்கப் பிரிவின் ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார்.
11. சிபிசிஐடி சிறப்பு விசாரணைக் குழுவின் ஐஜியாகப் பதவி வகித்து வரும் கபில் குமார் சரத்கர், செயலாக்கப் பிரிவின் ஐஜியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT