Published : 16 Oct 2021 01:30 PM
Last Updated : 16 Oct 2021 01:30 PM

குப்பைகளைத் தூக்கி எறிபவர்களுக்கு எவ்வளவு அபராதம்? - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

சென்னையில் பொது இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள் / வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களில் தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100 அபராதம், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000 அபராதம், பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகளைக் கொட்டுபவர்களில் 1 டன் வரை கொட்டுபவர்களுக்கு ரூ.2,000 அபராதம், 1 டன்னுக்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கழிவுகள், மரக்கழிவுகளைப் பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர்ப் பாதை / கால்வாய் நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவுகளை எரிப்பவர்களில் தனியார் இடங்களுக்கு ரூ.500 அபராதம், பொது இடங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x