Published : 13 Oct 2021 05:11 PM
Last Updated : 13 Oct 2021 05:11 PM
விருப்பத்துடன் வாழ்வது எப்படி என்பது குறித்து இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநர்களின் கூட்டமைப்பு நடத்தும் இணைய வழிக் கருத்தரங்கு அக்.19-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநர்களின் கூட்டமைப்பின் தலைவர் அ.மகாலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
’’பொதுவாக நம் வாழ்க்கையில் இறப்பைத் தவிர மற்ற அனைத்தையும், நாம் திட்டமிடுகிறோம். நாம் நமது இறுதி நாட்களில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான சுய உரிமையையும், நமது கண்ணியத்தையும், நம் அன்புக்குரியவர்களிடமும், நட்பு வட்டாரத்திலும் எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பது பற்றி இந்தக் கருத்தரங்கில் அறிந்துகொள்ளலாம். இது உங்கள் அன்புக்குரியவர்கள் மருத்துவ அவசர நிலையை எவ்வாறு கையாள்வார்கள் என்பதை விளக்கும்.
வாழும் விருப்பம் - (நவீன மருத்துவ வழிகாட்டல்) குறித்து சிறப்புரை ஆற்றுபவர்
டாக்டர் வி.கனகசபை எம்பிபிஎஸ், எம்டி, எம்பிஏ
சென்னை மருத்துவக் கல்லூரி & பொது மருத்துவமனை முன்னாள் முதல்வர்,
பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தற்போதைய துணைவேந்தர்.
நாள்: அக்டோபர் 19, 2021,
நேரம்: செவ்வாய்க் கிழமை மாலை 4.45 மணி
பொதுமக்கள், பெற்றோர்கள், மருத்துவத் துறை சார்ந்த அனைவரும் இந்த நிகழ்வில் கட்டணம் இன்றி ஜூம் செயலி மூலம் கலந்துகொள்ளலாம்.
ஜூம் மீட்டிங் ஐடி எண் : 875 5407 1708
கடவுக்குறியீடு : AHMP
இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 97104 85295 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்’’.
இவ்வாறு இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT