Published : 13 Oct 2021 11:54 AM
Last Updated : 13 Oct 2021 11:54 AM
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 2 மணிக்குள் முழுமையான முடிவுகள் வெளியாகும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உளளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாகக் கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த இருகட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
மொத்தமுள்ள 153 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவு தெரிந்த 8 இடங்களையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. இதேபோல் 1,421 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவு தெரிந்த 266 இடங்களில் திமுக- 198, அதிமுக - 28, காங்கிரஸ்- 7, இந்தியக் கம்யூனிஸ்ட்- 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 2, தேமுதிக - 1 பாமக உள்ளிட்ட மற்றவை 29 இடங்களைக் கைப்பற்றின.
9 மாவட்டங்களில் இன்னும் சில இடங்களில் முடிவுகள் வெளிவராமல் உள்ளன. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணும் பணி 98% நிறைவடைந்துள்ளது. வெற்றி பெற்றவர்கள் முழு நிலவரம் பிற்பகல் 2 மணிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT