Published : 13 Oct 2021 10:30 AM
Last Updated : 13 Oct 2021 10:30 AM

தினசரி கரோனா பாதிப்பு 1300-க்கும் கீழ் குறைவு: தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 1300-க்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், "தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 1300க்கும் கீழாக 1289 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சென்னையில் 164 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ந்து 17-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிச்சயமாக நிம்மதியளிக்கும் செய்தியாகும்.

தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள். அனைவரின் பணியும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக முழுவதும் நேற்று 1,289 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மாநிலம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,80,857 ஆக உள்ளது.

சென்னையில் 164 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,51,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,29,201 என்றளவில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x