Published : 12 Oct 2021 03:58 PM
Last Updated : 12 Oct 2021 03:58 PM

நீலகிரி, கோவையில் மிக கனமழை; 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

சென்னை

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக

12.10.2021:

நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கனமழை பெய்யக் கூடும்‌. ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல்‌, சேலம்‌, கள்ளக்குறிச்சி, காரைக்கால்‌ மற்றும்‌ டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

13.10.2021:

நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிக கனமழையும்‌, ஈரோடு, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

14.10.2021:

நீலகிரி, கோயம்புத்தூர்‌ , ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிக கனமழையும்‌, சேலம்‌, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கன்னியாகுமரி மற்றும்‌ டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

குறிப்பு : அடுத்த 48 மணி நேரத்தில்‌ அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள மத்தியக் கிழக்கு வங்கக் கடல்‌ பகுதியில்‌ புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து வரும்‌ 15ஆம்‌ தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்’’‌.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x