Last Updated : 17 Mar, 2016 08:07 AM

 

Published : 17 Mar 2016 08:07 AM
Last Updated : 17 Mar 2016 08:07 AM

அவசரப்படாதீர்கள்.. பலமான கூட்டணி அமைப்போம்: நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் விஜயகாந்த் - அதிருப்தியை சமாளிக்க முயற்சி

தனித்துப் போட்டி அறிவிப்பால் அதிருப் தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார். ‘யாரும் அவசரப்படாதீர்கள்… பலமான கூட்டணி அமைத்தே தேமுதிக தேர்தலை சந்திக்கும்’என்று அவர்களிடம் விஜயகாந்த் கூறியுள்ளதாக தெரிகிறது.

தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்துவிட்டதால் தேமுதிக வின் பெரும்பாலான மாவட்டச் செய லாளர்கள், நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சீட் கேட்டு, கட்சித் தலைமையிடம் கட்டிய பணத்தை நிர்வாகிகள் சிலர் திருப்பிக் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த விஜயகாந்த், அதிருப்தியில் உள்ளவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது பற்றி தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேமுதிக தனது கூட்டணி அறி விப்பை வெளியிடுவதற்கு முன்புவரை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நூற்றுக் கணக்கான தொண்டர்கள் தினமும் வந்த வண்ணம் இருந்தனர். தனித்துப் போட்டி என்று அறிவித்த பிறகு தொண்டர்களின் வரத்து குறைந்தது. மாவட்டச் செயலாளர்கள் பலரும் கட்சியின் முடிவால் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதிச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் 300 பேர், கடந்த வாரம் பாமகவில் இணைந்தனர். ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக மூத்த நிர்வாகியான தொழிலதிபர் சிங்கம் பஷீர், திமுகவில் இணைந்துள்ளார். இதேபோல, நிர்வாகிகள் சிலர் திமுக, அதிமுகவுக்கு செல்லப்போவதாக தலை மைக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து மாவட்டச் செயலாளர் கள், நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார். அதிருப்தியில் இருப்பவர்களை தேமுதிக தலைமைக்கழக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். ‘யாரும் அவசரப்பட வேண்டாம். கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்’ என்று கூறி வருகின்றனர். முக்கிய நிர்வாகிகளிடம் விஜயகாந்தே பேசுகிறார். விரைவில் நடக்க வுள்ள தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், இதுதொடர்பாக விஜயகாந்த் தெளிவுபடுத்துவார்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ம.ந. கூட்டணி, தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக் கிய வலுவான கூட்டணியை அமைப்பது தொடர்பாகவும் விஜயகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x