Published : 14 Mar 2016 10:02 AM
Last Updated : 14 Mar 2016 10:02 AM
இந்தியாவில் பெரும்பாலான விபத்துகளுக்கு போதிய அனுபவம் இல்லாத சொந்த வாகன ஓட்டுநர்களே காரணமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு சொந்த வாகனங்கள் வைத்திருப் போரால் 1,17,490 விபத்துகள் நடந்துள்ளன. வாடகை வாகனங் களால் 97,433 விபத்துகளும், வாடகை ஓட்டுநர்களால் (ஆக்டிங் டிரைவர்கள்) 1,30,770 விபத்து களும் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 45,863 பேர் உயிரி ழந்துள்ளனர். வேறு பல காரணங் களால் 80,410 விபத்துகள் நடந்து 10,545 பேர் உயிரிழந்துள்ளனர்.
சொந்த வாகன விபத்துகளில் மகாராஷ்டிர மாநிலமும், வாடகை ஓட்டுநர்கள் மற்றும் வாடகை வாகனங்களால் நடைபெறும் விபத் துகளில் தமிழகமும் முதலிடத்தில் உள்ளன.
3,89,974 விபத்துகள் நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களால் நடந்துள்ளன. அதில் 40,488 பேர் உயிரிழந்துள்ளனர். பழகுநர் உரிமம் பெற்றவர்களால் 50,815 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 8,347 பேர் இறந்துள்ளனர். ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களால் நேரிட்ட 39,314 விபத்துகளில் 7,573 பேர் இறந்துள்ளனர் என தேசிய ஆவணக் காப்பக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற்ற வர்களால் நடந்த விபத்து களில் தமிழகமும், பழகுநர் உரிமம் பெற்றவர்களால் நிகழ்ந்த விபத்து களில் மத்தியப் பிரதேசமும், உரிமம் இல்லாதவர்களால் நடக்கும் விபத்துகளில் உத்தரப் பிரதேசமும் முதலிடத்தில் உள்ளன.
இதுகுறித்து மதுரை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறியதாவது:
சொந்த வாகனங்களால் விபத் துகள் அதிகரிக்க, போதிய அனுபவம் இல்லாததே முக்கிய காரணம். என்னதான் ஓட்டுநர் உரிமம் இருந்து, சாலை விதிகள் தெரிந்திருந்தாலும், சாலைகளை அடிக்கடி பயன்படுத்தும்போதுதான் போதிய அனுபவம் கிடைக்கும். சொந்த வாகனம் வைத்திருப்போர் எப்போதாவது ஒருமுறை வெளியே எடுத்துச் செல்கின்றனர். அப்போது அவர்களின் அனுபவம் இன்மை விபத்தில் சிக்க வைக்கிறது.
வாடகை ஓட்டுநர்களைப் பொறுத்தவரை யாராவது அழைக் கும்போதுதான் ஓட்டுநர்களாகச் செல்கின்றனர். மற்ற நாட்களில் கூப்பிட்ட வேலைகளுக்குச் செல் கின்றனர். இதனால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்தில் முடிகிறது.
நிரந்தர ஓட்டுநர் உரிமம் வைத் திருப்பவர்கள் அதிக விபத்து களுக்கு காரணமாக இருப்பது வேதனையானது. அவர்கள் உரிமம் இருப்பதால் எது நடைபெற்றாலும் இழப்பீடு பெறலாம் என்ற தைரி யத்தில் வாகனங்களை வேகமாக இயக்கிச் சென்று விபத்தில் சிக்கு கின்றனர்.
வாகனம் இயக்குவது ஒரு கலை. அக்கலையை வெவ்வேறு தருணங்களில் நன்கு கற்று தேர்ச்சி அடையும்போதுதான் இலக்கை அடைய முடியும். வாகனம் நம்மு டையது, பயணம் செய்பவர்கள் நம் உறவினர்கள் என்ற மனப் பான்மையுடனும், சமூக அக்கறையு டனும் செயல்படும்போது விபத்து களை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT