Published : 09 Oct 2021 07:29 AM
Last Updated : 09 Oct 2021 07:29 AM
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் தொடங்கியது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.
முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று (அக்.9 ஆம் தேதி) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 8 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலுக்காக மொத்தம் 6.652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் 17,130 போலீஸார், 3,405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
77.43 சதவீதம்:
கடந்த 6 ஆம் தேதி நடந்த முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 755 ஊராட்சிஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,577 ஊராட்சித் தலைவர்கள், 12,252 கிராம வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதில் சராசரியாக 77.43 சதவீத வாக்குகள் பதிவாயின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT