Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM
மதுரையில் ஒரு மதுபாட்டில் ரூ.200 கூடுதல் விலைக்கு விற்றதோடு, பணியாளர்களே இன்றி விற்பனை நடந்துள்ளதும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் மதுவிலக்குத் துறை உயர் அதிகாரிகளை அதிர்ச்சி க்குள்ளாக்கியுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வரையில் கூடுதல் விலைக்கு விற்பதும், சிக்குவதும் வாடிக்கை. மதுரை மாவட்ட டாஸ்மாக்கில் விற்பனை, பணியாளர்கள் மற்றும் கிளப் பார்கள் செயல்பாடுகள் குறித்து பலவிதமான புகார்கள் சென்றன. இது குறித்து திடீர் ஆய்வுகள் நடத்த டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எல்.சுப்பிரமணியன் உத்தர விட்டார்.
மதுரை மண்டல மேலாளர் பா.அருண்சத்யா தலைமையில் அதி காரிகள் நேற்று முன்தினம் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வு குறித்து டாஸ்மாக் அலுவலர்கள், பணி யாளர்கள் கூறியது:
மதுரை பைபாஸ் சாலையில் கடை எண் 5587-ல் நடந்த சோதனையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.70 கூடுதலாக விற்பனை செய்ததைக் கண்டறிந்தனர். உடனே கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காளவாசல் அருகே மற்றொரு கடையின் சோதனையில் ஒரு மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்ததைவிட ரூ.200 அதிக விலைக்கு விற்றதை அறிந்தனர். அதுமட்டுமின்றி அந்தக் கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 பேரில் ஒருவர்கூட ஊழியர் இல்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து கடைப் பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு வெளி நபர்கள் 5 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு மது பாட்டில் ரூ.200 கூடுதல் விலைக்கு விற்றதை அதிகாரிகள் பதிவு செய்தது இதுவே முதல்முறை. நாளொன்றுக்கு 500 முதல் 1000 பாட்டில்கள் வரையில் ஒரு கடையில் விற்பனையாகின்றன. அப்படியானால் கூடுதல் தொகையே ரூ.1 லட்சத்துக்கும் மேல் கிடைக்கும்.
சோதனையில் சிக்கியது சாதாரண டாஸ்மாக் கடைகள் அல்ல. அங்கு 180 மி.லி அளவுள்ள ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ.5-க்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவது வாடிக்கை. தற்போது சோதனையில் சிக்கிய கடைகள் வெளிநாட்டு மது வகைகளை விற்பதற்காகவே பிரத்யேகமாக திறக் கப்பட்டவை.
‘மால்ஷாப்’ என்றழைக்கப்படும் இந்தக் கடைகளில் 720 மிலி முதல் 1 லிட்டர் கொண்ட முழு பாட்டில்கள் மட்டுமே கிடைக்கும். இந்தக் கடைகள் பார்வைக்கு தனியார் மதுக்கடைகள் போன்று தோற்றமளிக்கும். இத னால் ஊழியர்கள் என்ன விலை சொன்னாலும், மது பிரியர்கள் கிடை த்தால் போதும் எனக்கருதி வாங்கிச் செல்கின்றனர். இதனால் ரூ.20-ல் தொடங்கிய கூடுதல் விலை தற்போது ரூ.200 வரை சென்றுவிட்டது.
இந்த மால்ஷாப்களில் நியமிக் கப்படும் ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகளின் வலது கரமாகச் செயல் படும் அதிகாரம் மிக்க ஊழியர்கள் சிலரே தேர்வு செய்கின்றனர். பெயரளவில் மட்டுமே அவர்கள் ஊழியர்களாக இருக்க வேண்டும். மற்றபடி விற்பனை முழுவதையும் அதிகாரம் மிக்க ஊழியர்களே கூலிக்கு ஆள்வைத்து நடத்தியபோது ஆய்வில் சிக்கிக்கொண்டனர். மிக அதிக விற்பனை நடக்கும் பல டாஸ்மாக் கடைகள், மால்ஷாப்கள் இதுபோன்றோரின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இதற்கு அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் மறைமுக ஆதரவும் உண்டு.
மதுரையில் நடத்தப்பட்ட திடீர் சோதனை விவரங்கள், கூடுதல் விலை, நிர்வாக இயக்குநர் அலுவலகம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலும் கடும் நடவடிக்கைகள் பாயலாம் என்ற அச்சத்தில் ஊழியர்ககள் உள்ளனர், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT