Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் திமுக அரசு: பாஜக ஆர்ப்பாட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மதுரை

இந்துக்களின் வழிபாட்டு உரி மையை திமுக அரசு பறித்து வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக அரசு தளர்த்தாததால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்களில் பக்தர்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கோயில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்கக் கோரி மதுரை மீனாட்சியம்மன் கோயில் முன் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர் மேற்கு, விருதுநகர் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

இந்துக்களின் வழிபாட்டு உரிமை யை திமுக அரசு பறித்து வருகிறது. கோயில்களில் வழிபாடு நடத்துவது என்பது ஒவ்வொருவருக்கும் அரசி யலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையாகும். இந்த உரிமை பாது காக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் மகாலெட்சுமி, முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், மாவட்டத் தலைவர்கள் கே.கே.சீனிவாசன், மகா சுசீந்திரன், அரசு தொடர்பு பிரிவு செயலர் ராஜரத்தினம், முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன், மாவட்ட துணைத் தலைவர் ஹரிகரன், ஊடக பிரிவு நிர்வாகிகள் ராம்குமார், தங்கவேல்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பழநி

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கன கராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ஹெச்.ராஜா பேசியதாவது:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38,661 கோயில்களில் 20 சதவீதம் கோயில்கள் தற்போது இல்லை. கோயிலை எடு, பராமரி க்காமல் அழி என்பதுதான் பெரி யாரிஸ்டுகளின் குறிக்கோள். இதன் படி 7,000 கோயில்களை கழகங்கள் அழித்துள்ளன. இது முகலாயர்கள் படையெடுப்பில் நடந்த கோயில்கள் அழிப்பின் எண்ணிக்கையைவிட இவர்கள் அழித்தது அதிகம்.

பழநி, கோவை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் பாலாலயம் நடைபெற்று பல ஆண்டுகளாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருப்பது திட் டமிட்ட செயல் என்றார்.

இதில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம், மாநில மகளிர் அணித் தலைவர் மீனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் ராமகிருஷ்ண மடம் எதிரே மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார்.

மாவட்டப் பொதுச் செயலாளர் சுந்தர முருகன், முன்னாள் எம்.பி. கார்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x