Published : 06 Oct 2021 01:09 PM
Last Updated : 06 Oct 2021 01:09 PM
தேனி நிதி நிறுவன மோசடி வழக்கில் நிறுவன உரிமையாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தேனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (56). ஸ்ரீ பிரகாஷ் சிட்ஸ் மற்றும் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார். கடந்த 2002-ல் பலரிடம் பல லட்சம் ரூபாய் டெபாசிட் வசூலித்து, பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக மணிகண்டன் உட்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 8 பேரையும் தேனி நீதிமன்றம் 2008-ம் ஆண்டு விடுதலை செய்தது.
இதை எதிர்த்து போலீஸார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தேனி நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை மதுரை டான்பிட் நீதிமன்றம் விசாரிக்க 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த மனுவை டான்பிட் நீதிபதி ஹேமானந்த் குமார் விசாரித்தார். அதில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
''இந்த வழக்கில் உள்ள ஒருவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்படுகிறது. நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இறந்தவர் போக மற்ற அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்''.
இவ்வாறு நீதிபதி ஹேமானந்த் குமார் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT