Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM
தஞ்சாவூர் மாவட்டத்தின் புவிசார் குறியீடு பெற்ற 9 பொருட்கள் அடங்கிய பெட்டகம் ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்த வைக்கப்பட்டுள்ளன. இது ஓரிரு நாட்களில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.
பாரம்பரியத்துக்கும், கலைக ளுக்கும் பெயர் பெற்ற தஞ்சா வூர் மாவட்டத்தில் பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக் கப்பட்டு, உலகம் முழுவதும் விற் பனைக்கு செல்கின்றன. இந்த பொருட்களுக்கு உலக அளவிலான அங்கீகாரம் பெறும் வகையில் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
இந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை தஞ்சாவூர் மாவட் டத்தில் ஒரேஇடத்தில் வைத்து காட்சிப்படுத்தவும், அழிவின் விளிம்பில் உள்ள கைவினைப் பொருட்களை பாதுகாத்து, இளைய தலைமுறையினருக்கு பயிற்சிகள் வழங்கி அந்த பொருட் களின் உற்பத்தியை மேம் படுத்தவும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முழு முயற்சி எடுத்து வருகிறார்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட் டத்தில் புவிசார் குறியீடு பெற்ற சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், திருபுவனம் பட்டுச் சேலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், தஞ்சாவூர் நெட்டி வேலைப் பாடுகள், தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கண்ணாடி வேலைப்பாடுகள் ஆகிய 9 பொருட்களையும் அதன் உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்று, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தின் வரவேற்பறை யில் காட்சிப்படுத்துவதற்காக அலங்கார பெட்டகத்தில் வைக்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து இதன் ஒருங்கி ணைப்பாளரும், தஞ்சாவூர் ஓவிய ருமான மணிவண்ணன் கூறும் போது, “தஞ்சாவூர் மாவட்டம் மண்சார்ந்த பல பாரம்பரியமிக்க பொருட்களை உற்பத்தி செய்து புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இப்படி பெற்ற பொருட்களை பாதுகாக்கவும், இளைய தலை முறையினர் தெரிந்து கொள்ள வும், அதன்மூலம் பலருக்கு பயிற்சிகள் வழங்கி வாழ்வாதா ரத்தை ஏற்படுத்திக் கொள்ள வும் ஆட்சியரின் புதிய முயற்சி யால் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் பெட்டகம் ஏற்படுத் தப்படுகிறது. இதற்காக பிரத்தி யேகமாக 9 பொருட்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் ஆட்சியர் அலுவலக வரவேற்பறையில் வைக்கப்பட்டு, அதன் அருகிலேயே அப்பொருட்களின் விவரங்களும் வைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் திறக்கப்பட உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT