Published : 04 Oct 2021 03:12 AM
Last Updated : 04 Oct 2021 03:12 AM

தேர்தலன்று விடுப்பு தராவிட்டால் நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்

தேர்தல் நாளன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பா.லிங்கேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அக். 6, 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று அனைவருக்கும் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், அனைத்து கடைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அலுவலகங்கள் மூலம் தேர்தல் நாட்களில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறை அலுவலர்களுக்கு கைபேசி மற்றும் அலுவலக தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம்: பா.லிங்ககேஸ்வரன் - தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), காஞ்சிபுரம் - 87786 19552. அலுவலக தொலைபேசி 044 27237010. தி.கமலா - தொழிலாளர் துணை ஆய்வர், காஞ்சிபுரம் - 99526 39441. பா.மாலா-தொழிலாளர் உதவி ஆய்வர், பரங்கிமலை - 94441 52829, சி.த.வெங்கடாசலம் - முத்திரை ஆய்வர், காஞ்சிபுரம் - 94440 62023.

செங்கல்பட்டு மாவட்டம்: மனோஜ் ஷியாம் சங்கர் - தொழிலாளர் துணை ஆய்வர், பரங்கிமலை - 86675 70609. ஆர்.பிரபாகரன் - தொழிலாளர் உதவி ஆய்வர், செங்கல்பட்டு - 99442 14854, த.பொன்னிவளவன் - தொழிலாளர் உதவி ஆய்வர், மதுராந்தகம் - 97892 53410. மா.வெங்கடேசன் - தொழிலாளர் உதவி ஆய்வர், தாம்பரம் - 88705 99105, வீ.சிவராஜ் - முத்திரை ஆய்வர், செங்கல்பட்டு - 79045 93421, ஆர்.வேதநாயகி - முத்திரை ஆய்வர், பரங்கிமலை - 98842 64814.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x