Published : 10 Jun 2014 09:14 AM
Last Updated : 10 Jun 2014 09:14 AM

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலைய முதல் யூனிட்டில் விரைவில் மின் உற்பத்தி: தமிழகத்துக்கு 194 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்

தூத்துக்குடியில், தமிழ்நாடு மின் சார வாரியத்துடன் இணைந்து, என்.எல்.சி. நிறுவனம் அமைத்துள்ள 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலைய முதல் யூனிட்டில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. மிக விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனல்மின் நிலையம்

தூத்துக்குடியில், தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி திறனு டைய இரண்டு யூனிட்டுகளை கொண்ட 1000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க, தமிழ் நாடு மின் உற்பத்திக் கழகம், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் கடந்த 2001- 02-ல் முடிவு செய்தன.

இதற்காக என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் (என்.டி.பி.எல்.) என்ற கூட்டு நிறுவனம் உருவாக்கப் பட்டது.

மத்திய நிலக்கரித் துறை அமைச்சகமும், மத்திய மின் துறை அமைச்சகமும் இந்த திட்டத்துக்கு கடந்த 2003 பிப்ரவரியில் அனுமதி அளித்தன. இதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்துக்கு தமிழக அர சும் அதே ஆண்டில் ஒப்புதல் அளித்தது.

அதன்பேரில், தூத்துக்குடியில் ரூ.4,910 கோடி மதிப்பீட்டில் 1000 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு கடந்த 12.05.2008-ல் முறைப்படி அனுமதி கொடுத்தது. திட்ட மதிப்பீட்டில் 89 சதவீதத்தை என்.எல்.சி. நிறுவன மும், 11 சதவீதத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் பங்களிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, புதிய அனல்மின் நிலையம் அமைப்பதற்கான கட்டு மான பணிகள் தற்போது முடிவடை யும் தறுவாயில் உள்ளன.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து, என்.டி. பி.எல். அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி நேரடியாக வரும் வகை யில், நீண்ட தொலைவுக்கு கன் வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள் ளது. மேலும், அனல்மின் நிலைய பயன்பாட்டுக்காக கடல் நீரை குடிநீராக்கும் நிலை யமும் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு யூனிட்டுகளிலும் நவீன பாய்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 275 மீட்டர் உயரம் கொண்ட புகை போக்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக அலுவலகக் கட்டிடம், ஊழியர் குடியிருப்பு, போன்ற அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டம்

முதல் யூனிட்டில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்துவிட்டதால், இந்த யூனிட்டில் மின் உற்பத்திக் கான ஆயத்த பணிகள் நடைபெறு கின்றன. முதல் கட்ட சோதனை ஓட் டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள் ளது. தற்போது 2-ம் கட்ட சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இந்த சோதனை முடிந்ததும் 3-ம் கட்ட சோதனை நடைபெறும்.

இது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழிடம் பேசிய என்.டி.பி.எல். மூத்த அதிகாரி ஒருவர், ‘முதல் கட்ட சோதனைகள் அனைத் தும் வெற்றிகரமாக முடிக்கப் பட்டுள்ளன. தற்போது இரண் டாம் கட்ட சோதனைகள் நடைபெறு கின்றன. மூன்று கட்ட சோதனை களும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, நீராவி டர்பைனுக்குள் செலுத் தப்பட்டு சோதனை நடத்தப்படும். இது இறுதிக்கட்ட சோதனை. அதற்கு பிறகு படிப்படியாக மின் உற்பத்தி தொடங்கும். இந்த பணிகள் அனைத்தும் மிக விரைவில் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்கும்’ என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

முதல் யூனிட்டில் ஓரிரு மாதத் தில் மின் உற்பத்தி தொடங்கும். முதல் யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கிய 3-வது மாதத்தில் 2-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடங்கும் என என்.டி.பி.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.

387 மெகாவாட்

முதல் யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கும் போது தமிழகத்தின் பங்காக 194 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இரண்டு யூனிட்டுகளும் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழகத்துக்கு மொத்தம் 387 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். மின் பற்றாக்குறையில் இருக்கும் தமிழ கத்துக்கு இது மிகப்பெரிய வரப் பிரசாதமாக அமையும் என தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் உற்பத்தி யாகும் மின்சாரம் பகிர்ந்தளிக் கப்படும் விகிதம்:

தமிழகம் - 387 மெகாவாட்

கர்நாடகம் - 157.9 மெகாவாட்

புதுச்சேரி - 9.5 மெகாவாட்

கேரளம் - 72.5 மெகாவாட்

ஆந்திரம் - 254.6 மெகாவாட்

ஒதுக்கீடு செய்யப்படாதது - 118.5 மெகாவாட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x