Published : 29 Mar 2016 04:36 PM
Last Updated : 29 Mar 2016 04:36 PM
முல்லை பெரியாறு அணைப் பகுதியில் இரும்பு கேட் அமைக்க கேரள அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுத தமிழக பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை யில் 152 அடியாக நீர் தேக்கக் கூடாது என்பதற்காக கேரள அரசு பல்வேறு வகையில் தடைக ளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் அணைப்பகுதியில் கேரள அமைச்சர், எம்எல்ஏ மற்றும் அம்மாநில அதிகாரிகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க இரும்பு கேட் (நுழைவு வாயில்) அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி ரூ.4.50 லட்சம் மதிப்பில் தேக்கடி படகுத் துறையில் 2, அணைப்பகுதியில் 2, ஷட்டர் பகுதியில் 1 என 5 இடங்களில் இரும்பு கேட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்காக 5 இரும்பு கேட்டுகள் தயாரிக்கப்பட்டன. இதனை நேற்றுமுன்தினம் தமிழக பொதுப்பணித் துறை தொழிலாளர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இடுக்கி மாவட்ட ஆட்சியர் கவுசிகன், எஸ்.பி. வர்கீஸ் தலைமையிலான அதிகாரிகளும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று கேட் அமை க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து ‘தி இந்து’விடம் விவசாயிகள் சிலர் கூறியது:
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கேட் அமைக்கும் பணியின்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருவர்கூட அங்கு இல்லை, இதனால் கேரள அதிகாரிகள் தொழிலாளர்களை மிரட்டி பணி களை நிறுத்திவிட்டனர். இனி வரும் காலங்களில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அணைப் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள குடி யிருப்புகளில் தங்கி பணிகள் மேற்கொள்ள வேண்டும். அப் போதுதான் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்றனர்.
இது தொடர்பாக பெரியாறு அணையின் செயற்பொறியாளரும், மத்திய துணைக் குழுவின் தமிழக பிரதிநிதியுமான மாதவன் கூறியது:
அணைப்பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் குத்தகைக்கு மட்டுமே விடப்பட்டுள்ளது. இங்கு மராமத்துப் பணிகள் மேற் கொள்ளலாம்.
ஆனால் புதிய பணிகள் தொடங்க வேண்டுமென்றால் கேரள அரசிடம் அனுமதி பெற வேண்டும் என அந்த மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்று கேட் அமைக்க அனுமதி கோரி கேரள அரசுக்கு நாளை (இன்று) கடிதம் எழுத உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT