Published : 02 Mar 2016 09:43 AM
Last Updated : 02 Mar 2016 09:43 AM
எந்த நேரமும் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நிலையில் இருக்கிறோம். ஜனநாயகத்தில் தேர்தல் என்று வந்துவிட்டால், போட்டியிடும் வேட் பாளர்களில் யார் அதிக ஓட்டு பெறுகிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி. கூட்டம் காட்டுதல், வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் செய்யப்படும் விளம்பரங்கள் போன்ற எதுவும் அந்த இடத்தில் நிற்கப் போவதில்லை.
தமிழகத்தில் இன்றைய கணக்குப்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சம். மொத்தம் 234 தொகுதிகள். தொகுதிக்கு சராசரியாக 2 லட்சம் ஓட்டுகள். இதில், பதிவாகும் ஓட்டுகள் 75 முதல் 80 சதவீதம். அந்த வகையில், இருமுனைப் போட்டி என்றால், ஒரு லட்சத்தை தாண்டி எடுக்கும் கட்சி வெற்றி பெற்றுவிடும். இருமுனை, மும்முனை போட்டிகள் வலுவாக இருந்தால், சராசரியாக 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஓட்டுகள் பெற வேண்டியதிருக்கும்.
எந்த ஒரு கட்சி ஒவ்வொரு தொகுதியிலும் இந்த எண் ணிக்கையை தொடு கிறதோ, அந்தக் கட்சி தான் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும். அந்த வகையில் அதிமுக வும், திமுகவும்தான் களத்தில் நிற்பவை. மற்ற கட்சிகள் எல்லாமே அவர்களது பலத்தை கூட்டலாமே தவிர, அவர் களது வெற்றியை தடுக்க முடி யாது. ஓரிரு தொகுதிகள் விதி விலக்காக அமைந்தாலும், ஒட்டுமொத்த வெற்றி, தோல்வி என்பது இந்த 2 பெரிய கட்சிகளுக்கு இடையில் மட்டுமே இருக்கும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 ஓட்டுகள், அதாவது 44.34 சதவீத ஓட்டுகளைப் பெற்று, 37 இடங்களைக் கைப்பற்றி தனது பலத்தை நிரூபித்துள்ள அதிமுகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஒரு மாநிலக் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் இந்த அள வுக்கு இடங்களைப் பிடிக் கிறது என்றால், சட்டப் பேரவைத் தேர்தலில் அதன் செல்வாக்கை குறைத்து மதிப்பிட் டால், அது உண் மையை புறந் தள்ளுவ தாக அமைந்து விடும்.
அதிமுகவை வீழ்த் தும் பலம் யாருக்கு இருக்கி றது என்பதை பார்க்க வேண்டும். கடந்த தேர்தலில் 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஓட்டுகள் அதாவது 23.61 சதவீதம் பெற்றுள்ள திமுக-வுக்கு மட்டுமே வீழ்த்தும் சக்தி இருக்க முடியும். அதற்கு மற்ற கட்சிகள் ஒத்துழைத்தால் மட்டுமே அது சாத்தியம். விஜயகாந்த் மட்டுமே 7 சதவீதம் ஓட்டுகளை ஈர்க்கும் சக்தியாக உள்ளார். காங்கிரஸ், பாமக, பாஜக, மதிமுகவின் ஓட்டுகள் 5 சதவீதத்தை சுற்றியே உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஓட்டுகள் ஒரு சதவீதம் அரை சதவீதத்தைச் சுற்றியே உள்ளன. அதிமுகவை வீழ்த்துவது என்றால், திமுகவை இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து பலப்படுத்தினால் மட்டுமே முடியும் என்ற நிலைதான் உள்ளது.
அதை தவிர்த்து, மக்கள் நல கூட்டணி, 3-வது அணி, தனித்துப் போட்டி என்ற முடிவுகளெல்லாம் ஏதோ ஒரு எண்ணிக்கையில் ஓட்டுகளை பெறலாமே தவிர, வெற்றி என்ற இலக்குக்கு உயர்த்தாது. இன்றைய நிலையில், திமுக-காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ளன. மக்கள் நலக் கூட்டணி தனியாகவும், பாமக தனியாகவும், விஜயகாந்த் - பாஜக ஆகியவை பேச்சுவார்த்தை நிலையிலும் உள்ளன. அனைத்துக் கட்சிகளும் ஏதாவது ஒரு நிலையில், தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பிறகே தமிழகத்தின் வெற்றி, தோல்வி குறித்த ஒரு தெளிவு நிலை கிடைக்கும். தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் நிலை இருப்பதால், கூட்டணி நிலவரங்களும் இன்னும் சில நாட்களில் ஸ்திரமான நிலையை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT