Published : 02 Oct 2021 12:36 PM
Last Updated : 02 Oct 2021 12:36 PM

கல்விக் கண் திறந்த காமராஜரை தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது: முதல்வர் ஸ்டாலின்

காமராஜர்: கோப்புப்படம்

சென்னை

கல்விக் கண் திறந்த காமராஜரைத் தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய, 'கர்ம வீரர்', 'கல்விக்கண் திறந்தவர்' என போற்றப்படும் முன்னாள் முதல்வர் காமராஜர், கடந்த அக். 02, 1975-ம் ஆண்டு காலமானார். காமராஜரின் நினைவு நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்தியும், அவரை நினைவுகூர்ந்தும் வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

இந்நிலையில், காமராஜர் நினைவு தினம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 02) தன் ட்விட்டர் பக்கத்தில், "எளிமையின் உருவம் - ஏழைப் பங்காளர் பெருந்தலைவர் காமராஜரின் நினைவுநாள்! கல்விக் கண் திறந்த அவரைத் தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது! பெருந்தலைவரின் தொண்டுள்ளம் கொண்டு பொதுவாழ்வில் செயல்படுவோம்!" என பதிவிட்டுள்ளார்.

— M.K.Stalin (@mkstalin) October 2, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x