Published : 14 Mar 2016 10:44 AM
Last Updated : 14 Mar 2016 10:44 AM
*
தேமுதிக ஒதுங்கிவிட்ட நிலையில், 2001 பாணியில் ஜாதிய கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆதர வோடு தேர்தலில் களமிறங்க திமுக திட்டமிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற் காக திமுக தீவிர முயற்சிகளில் ஈடு பட்டது. ஆனால், தனித்து போட்டி யிடப் போவதாக தேமுதிக அறிவித்து விட்டது. எனவே, சிறிய கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆதர வுடன் தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான பேச்சுவார்த்தை குழு தீவிர மாக ஈடுபட்டுள்ளது.
இதுபற்றி திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தனித்துப் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துவிட்ட நிலை யில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 2 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், அந்தந்த பகுதிகளில் செல் வாக்குள்ள அரசியல் கட்சிகள், ஜாதிய அமைப்புகள், சமூக இயக் கங்களை ஒருங்கிணைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப் படையில் 19 அமைப்புகள் தற்போது திமுகவுக்கு ஆதரவளித்துள்ளன.
இதுமட்டுமன்றி புதிய தமிழகம், அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, நடிகர் கார்த்திக் கின் நாடாளும் மக்கள் கட்சி, சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் திமுக குழு பேச உள்ளது.
திமுக அணியில் தற்போது காங் கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே உள்ளன. காங்கி ரஸுக்கு 20 முதல் 35 இடங்கள் வரை திமுக தரப்பில் ஒதுக்கப்படலாம். சிறிய கட்சிகளுக்கு மொத்தமாக 34 தொகுதிகள் என கூட்டணிக் கட்சிகளுக்கு 60 முதல் 70 தொகுதி களை ஒதுக்கிவிட்டு, 160-க்கும் அதிக மான தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, ‘‘கூட்டணி பேச்சுவார்த் தைக் குழு தனது முதல்கட்ட பணியைத் தொடங்கியுள்ளது. இதன டிப்படையில், 19 அமைப்புகள் திமுக வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இன்னும் பல கட்சிகளுடனும், அமைப்புகளுடனும் பேச உள்ளோம். திமுக அணி வலுவானதாக உரு வெடுக்கும்’’ என்றார்.
கடந்த 2001 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 169 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. திமுகவின் சின்னத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 இடங்களிலும், ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயக பேரவை 2 இடங்களிலும், ஜே.எம்.ஆரூண் தலைமையிலான தமிழக முஸ்லிம் ஐக்கிய பேரவை 3 இடங்களிலும், குழ.செல்லையாவின் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜகவுக்கு 21, புதிய தமிழகம் கட்சிக்கு 10, மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு 6, புதிய நீதிக் கட்சிக்கு 5, திருநாவுக்கரசரின் எம்ஜிஆர் அதிமுக வுக்கு 3, ஆர்.எம்.வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்துக்கு 2, கொங்குநாடு மக்கள் கட்சி, கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் திமுக கூட்ட ணிக்கு 37 இடங்களே கிடைத்தன. 2001 பாணியில் இப்போதும் சிறிய கட்சிகள், ஜாதிக் கட்சிகளை ஒருங் கிணைத்து தேர்தலை சந்திப்பது திமுகவுக்கு கைகொடுக்குமா என்ற கேள்வி அக்கட்சி தொண்டர்கள் மத்தி யில் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT