Last Updated : 24 Mar, 2016 07:11 AM

 

Published : 24 Mar 2016 07:11 AM
Last Updated : 24 Mar 2016 07:11 AM

அஞ்சலகங்களில் ‘கோர்பேங்கிங்’ பிரச்சினைக்கு யார் பொறுப்பு?

‘கோர்பேங்கிங்’ வசதியில் மென்பொருள், இணையத் தொடர்பு பிரச்சினையால் அஞ்ச லகப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிருப்தி யைத் தவிர்க்க, பிரச்சினை குறித்து அனைத்து அஞ்சலகங்களிலும் தொழிற்சங்கத்தினரே அறிவிப்பு களை வெளியிட்டு வருகின்றனர்.

அஞ்சலகங்களை கணினி மயமாக்கும் வகையில் ஒருங்கி ணைந்த வங்கிச் சேவை எனப்படும் ‘கோர் பேங்கிங்’ வசதி, 2013-ல் சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டது. இத் திட்டம் தற்போது நாடு முழுவதும் 25,406 அஞ்சல கங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

இத்திட்டம் காரணமாக அஞ்ச லகங்களில் முன்பிருந்த செயல் பாட்டு முறைகள் அனைத்தும் ‘கோர்பேங்கிங்’ முறைக்கு மாற்றப் படுகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக இணையத் தொடர்பு, மென்பொருள் ஆகிய வற்றில் தொடர்ந்து பிரச்சினை நிலவுகிறது. இதனால் பொது மக்கள் அஞ்சலகங்களில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டி யுள்ளது. ஊழியர்களும் நீண்ட நேரம் பணி புரிய வேண்டியுள்ளது. நீண்ட நேரம் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பொறுமையிழந்து ஊழியர்களிடம் தகராறுகளில் ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில், மும்பை மாதுங் காவில் ஆத்திரமடைந்த மக்கள் அஞ்சலகத்தையே சூறையாடி விட்டனர். இந்நிலையில் பொதுமக் களிடம் உண்மை நிலையை புரிய வைக்க, கோவை கோட்ட அனைத் திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் 3-ம் பிரிவு சார்பில் அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுமக்க ளுக்கான அறிவிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

அதில் ‘அஞ்சல் துறையில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக கணி னிகள் சரிவர இயங்க வில்லை. இதனால் பொதுமக்க ளுக்கான சேவை பாதிக்கப் படுகிறது. இதற்கு இங்கு பணிபுரியும் அஞ்சல் அதிகாரியோ, ஊழியர்களோ பொறுப்பல்ல. விரைவில் நிலைமை சீரடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல்துறையினர் கூறும் போது, `இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென மத்திய அமைச்சகத்துக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் என நம்புகிறோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x