Published : 30 Sep 2021 03:05 PM
Last Updated : 30 Sep 2021 03:05 PM
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலவிஜய் மக்கள் இயக்கம் களம் இறங்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தமிழக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 169 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 157 பேர் களத்தில் உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலர் புஸ்சி ஆனந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது புதுச்சேரியில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித்தேர்தல் வரவுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, "புஸ்சி ஆனந்து புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவர் நடிகர் விஜயிடம் மிக நெருக்கமானவர். புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தலில் விஜய் மக்கள் இயக்த்தினர் போட்டியிட நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை கண்டறிந்துள்ளோம். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசி தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
விரைவில் இப்பட்டியல் தயாராகும். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கும்.புதுச்சேரி உள்ளாட்சித்தேர்தலில் விஜய் பெயரையும், மன்ற கொடியையும் பயன்படுத்தவும் உள்ளோம். அதற்கு அனுமதியும் தரப்பட்டுள்ளது. " என்று குறிப்பிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT