Published : 30 Sep 2021 07:45 AM
Last Updated : 30 Sep 2021 07:45 AM
மதுரை நகரில் குடும்பப் பிரச்சினை, கணவன்- மனைவி தகராறு, வரதட்சிணை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் போக்ஸோ குறித்த சம்பவங்களை தல்லாகுளம், மதுரை நகர், தெற்குவாசல், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.
4 காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் இருந்தாலும், பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகாண போதிய எஸ்ஐகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக மகளிர் போலீஸார் கூறியதாவது:
ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தினமும் 20 புகார்கள் வரை வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் கணவன், மனைவி பிரச்சினைகளே அதிகம். இவற்றுக்கு உடனே எப்ஐஆர் பதிவு செய்யாமல், ஆரம்ப விசா ரணை, கவுன்சலிங் அளிக்க வேண்டும். பெரும்பாலும், எஸ்ஐகளே இதுகுறித்து விசாரணை நடத்துவர்.
இதுதவிர வரதட்சிணை, போக் ஸோ, காதல் திருமண விவகாரம் உள்ளிட்ட புகார்களையும் எஸ்ஐகளே கையாள வேண்டும். நீதிமன்ற விசாரணை, பாதுகாப்பு போன்ற அவசரப் பணிகளால் மகளிர் காவல் நிலையங்களில் தொடர்ந்து எஸ்ஐகள் பற்றாக்குறை நிலவுகிறது.
தற்போது திருப்பரங்குன்றம், தெற்கு, நகர் மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலா ஒரு எஸ்ஐகளும் பிரசவகால விடுமுறையில் இருப்பதால் ஓராண்டு வரை அவர்கள் பணிக்கு வர முடியாது. இக்காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் 3 எஸ்ஐக்களாவது இருக்க வேண்டும். தல்லாகுளம் காவல் நிலையத்தில் இரு எஸ்.ஐ.கள் இருந்தாலும் அதிக புகார்கள் வருவதால் 5 எஸ்.ஐ.கள் வரை பணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், இக் காவல்நிலையம் இட நெருக்கடியிலும் சிக்கி உள்ளது. இதனிடையே கடந்த 9 மாதத்தில் தல்லாகுளத்தில் சுமார் 45 எப்ஐஆர்களும், திருப்பங்குன் றத்தில் 26, தெற்கு, நகர் மகளிர் காவல் நிலையங்களில் தலா 25-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகி உள்ளன.
மகளிர் காவல் நிலையத் துக்கான எஸ்.ஐ.கள் பற்றாக் குறையைப் போக்க, அதிக எப்ஐஆர் பதிவில்லாத மீனாட்சி கோயில் உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் பணியாற்றும் எஸ்ஐகள் பற்றி ஆய்வுசெய்து பணிநிரவல் செய்ய காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT