Published : 26 Jun 2014 09:01 AM
Last Updated : 26 Jun 2014 09:01 AM
ஆம்பூர் தாலுகா சின்னவெங்கட சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50), விவசாயி. பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவரது 2-வது மகள் இளவரசி வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்நிலையில், ஜூன் 20-ம் தேதி இரவு 7 மணிக்கு கரும்பூரில் உள்ள வங்கி ஏடிஎம் சென்டரில் பணம் எடுத்து வருவதாக கூறிச்சென்ற பன்னீர்செல்வத்தி்ன் மகள் பின்னர் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகளைக் காணாததால், உமராபாத் காவல் நிலை யத்தில் புகார் செய்தனர். விக்கி என்பவர் தான் தன் மகளை கடத்திச்சென்றார் என புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், மனமுடைந்த பன்னீர் செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக் கள் மற்றும் பாமக நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து இருபிரிவினரிடமும் போலீஸார் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் செய்வாய்கிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதற் கிடையே, பன்னீர்செல்வத்தின் மகள் தன் காதல் கணவர் விக்கியுடன் ஆம்பூர் ஜெஎம் நீதிமன்றத்தில் சரணடைந் தார். அப்போது அவர் தன் கணவரு டன் இருக்க விரும்புவதாக நீதிபதி யிடம் கூறினார்.
இந்த தகவலையறிந்ததும், பன்னீர் செல்வம் உறவினர்கள் மீண்டும் கொந்த ளித்தனர். பன்னீர்செல்வம் இறப்புக்கு காரணமான 3 பேரையும் கைது செய்தால்தான், மருத்துவமனையில் இருந்து அவரது உடலைப் பெற்றுக் கொள்வோம் என வாக்குவாதம் செய்தனர். நிலைமை மோசமாவதை யறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் விஜயகுமார் ஆம்பூருக்கு வந்து இரு பிரிவினரிடமும் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக அதிரடி படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT