Published : 21 Mar 2016 10:02 AM
Last Updated : 21 Mar 2016 10:02 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்ற மான வாக்குச் சாவடிகள் இல்லாத, அமைதியான தொகுதியாக உத்திர மேரூர் சட்டப்பேரவைத் தொகுதி விளங்குகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் கரையை ஒட்டி அமைந் துள்ளது உத்திமேரூர் சட்டப்பேர வைத் தொகுதி. இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பது வரலாறு. இதுவே இத்தொகுதியின் சிறப்பம்சம் ஆகும்.
உலகுக்கே குடவோலை முறை யின் மூலம் தேர்தலை அறிமுகப் படுத்திய ஊர் உத்திரமேரூர். அங்கு இடம்பெற்றுள்ள பண்டைய கால கல்வெட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.
ஏரி மாவட்டம் என்று பெயர் பெற் றிருந்த காஞ்சிபுரம் மாவட்டம், அதன் பாரம்பரியப் பெயரை இழந்து, பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்த மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ள நிலையிலும், உத்திரமேரூரில் சொல்லிக் கொள்ளும்படியாக தொழிற்சாலைகள் இல்லை. இந்த தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயி ரத்து 391 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 171 பெண் வாக்காளர்கள், 10 இதர வாக்காளர் என 2 லட்சத்து 42 ஆயிரத்து 572 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் ஒன்று கூட இல்லை. இம்மாவட்டத்தில் இத் தொகுதி அமைதியான தொகுதி என்ற பெயரை பெற்றுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத் தம் 3 ஆயிரத்து 973 வாக்குச் சாவடி கள் உள்ளன. அதில் 300 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப் பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 11 தொகுதி களில் பல்லாவரம் தொகுதியில் அதிக பட்சமாக 78 வாக்குச் சாவடி கள் உள்ளன. 56 வாக்குச் சாவடி களுடன் செங்கல்பட்டு 2-ம் இடத் திலும், 33 வாக்குச் சாவடிகளுடன் ஆலந்தூர் 3-ம் இடத்திலும் உள்ளன. உத்திரமேரூர் தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகளே இல்லை” என்றார் அவர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதற்கு முன்பு நடைபெற்ற தேர் தல்களின்போது, வாக்குச் சாவடி களில் ஏற்பட்ட மோதல் சம்பவங் கள், அசம்பாவிதங்கள் குறித்து காவல்துறை வழங்கும் தகவல் அடிப்படையில் பதற்றமான வாக்குச் சாவடிகள் தீர்மானிக்கப்படுகின்றன. உத்திரமேரூர் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் இதுவரை அவ்வாறு பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. அத னால் அங்கு பதற்றமான வாக்குச் சாவடிகள் இல்லை” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT