Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

பராமரிக்கப்படாத கால்வாய்கள்: மழை பெய்தால் வெள்ளக்காடாகும் மதுரை சாலைகள்

தூர்வாரப்படாமல் உள்ள மதுரை பைபாஸ் ரோடு கிருதுமால் நதி மழைநீர் கால்வாய். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் அலட்சியம் காட்டுவதால் மழைக் காலங்களில் மதுரை சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியவில்லை.

மதுரை மாநகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட மற்றும் மாநகராட்சி சாலைகள் உள்ளன. இதில் மாநகராட்சி மட்டும் 1,572 கி.மீ. தொலைவுக்கு முக்கியச் சாலைகள், குடியிருப்பு சாலைகளை பராமரிக்கிறது. இந்த சாலைகள், தார் சாலையாகவும், சிமெண்ட் சாலைகளாகவும் உள் ளன. சில இடங்களில் கருங்கற்கள், பேவர்பிளாக் சாலைகளாகவும் உள்ளன. பெரும் பாலான குடி யிருப்பு சாலைகளில் மழைநீர் கால்வாய்கள் இல்லை.

முக்கிய சாலைகள் செல்லும் பகுதிகளில் மட்டும் 13 மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இந்த மழைநீர் கால்வாய், பருவமழைக்கு முன் பெயரளவுக்கு மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. மற்ற காலங்களில் பராமரிப்பதில்ைல. அதனால், இந்த மழைநீர் கால் வாய்களில் முட்புதர், குப்பைகள் நிரம்பிக் காணப்படுகின்றன.

மண் நிரம்பி மேடாகியும் விடுகிறது. தனியார் நிறு வனங்கள், ஹோட்டல்களில் வீணாகும் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகின்றன. அதனால், மழைக்காலங்களில் மழைநீர் இக்கால்வாய்களில் செல்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏற்கெனவே தரமின்றி அமைக்கப்பட்ட மாநக ராட்சி சாலைகள், மழையால் அரிக்கப்பட்டு படுமோசமாகி விடுகின்றன. மீண்டும் சாலை களை புதிதாக போட நிதி யில்லாவிட்டால் பேட்ஜ் ஒர்க் மட்டும் பார்க்கப்படுகிறது. அதனால், நிரந்தரமாக மாநகராட்சி சாலைகள் குண்டும் குழியுமாகவும், கற்கள் பெயர்ந்து உருக்குலைந்தும் போக்குவரத்துக்கு லாயக்கற்றும் உள்ளன. மழைக்காலங் களில் மழைநீர் தேங்கியும், கோடையில் புழுதி வாரி இறைப்பதுமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகிறார்கள்.

நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை நின்று எப்போது மழைநீர் வடிகிறதோ அப்போதுதான் செல்ல முடிகிறது. குறிப்பாக பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், அண்ணாநகர் காவல் நிலையம் முன்புள்ள சாலைகளில் மழை நின்ற பிறகும், மழைநீர் வடிவதற்கு பல மணி நேரம் ஆவதால் போக்கு வரத்து அதிகம் பாதிக்கப்படுகிறது. பலர் கீழே விழுந்து விபத்துகளில் சிக்க நேரிடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பருவமழைக்கு முன்பாக மழைநீர் கால்வாய்களை பராமரிக்கும் பணி நடக்கிறது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x