Published : 22 Sep 2021 03:08 AM
Last Updated : 22 Sep 2021 03:08 AM

தமிழக-ஆந்திர எல்லையில் தொடர் மழையால் 60 நாளில் மீண்டும் நிரம்பிய மோர்தானா அணை : பச்சக்குப்பம் பாலாற்றில் தரைப்பாலத்தை கடந்து சென்ற வெள்ளநீர்

மோர்தானா அணை நேற்று முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. அடுத்த படம்: ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை கடந்து செல்லும் வெள்ளநீர்.

வேலூர்

தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 60 நாட் களுக்குள் மீண்டும் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 11.50 மீட்டர் உயரமுடையது. இதன் முழு கொள்ளளவு 261.360 மில்லியன் கன அடியாகும். அணை யின் நீர்பிடிப்புப் பகுதி ஆந்திர வனப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் அக்டோபர் மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் ‘நிவர்’ புயல் பாதிப்பால் அதிகபட்ச அளவாக கிடைத்த சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதும் கவுன்டன்யா ஆற்றின் வழியாகச் சென்று பாலாற்றில் கலந்தது. மேலும், கால்வாய் வழியாகவும் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டம் 11.40 அளவாக குறைந்தது.

இதற்கிடையில், பாசன விவசாயிகள் பயன்பாட்டுக்காக அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு இடது மற்றும் வலதுபுற கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், கடைமடை வரை உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து உறுதி செய்யப்பட்டது.

அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி நிலவரப்படி பராமரிப்பு மற்றும் பயன்படுத்த முடியாத நீர் இருப்பு அளவாக 3.65 மீட்டர் என்றளவில் இருந்தது. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து மீண்டும் ஏற்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.

மோர்தானா அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் (செப்.20) மாலை 5 மணியளவில் 11.35 மீட்டராக உயர்ந்தது. அணைக்கு போதுமான அளவு நீர்வரத்து இருந்ததால் முழு கொள்ளளவு எந்த நேரமும் எட்டிவிடும் என்ப தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மோர்தானா அணை நேற்று அதிகாலை 5 மணி நிலவரப்படி முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு 90 கன அடி வீதம் நீர்வரத்து இருந்த நிலையில் அது அப்படியே வெளியேற்றப்பட்டது. 60 நாட்களில் அணை முழு கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர். மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியதுடன் உபரி நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பரவலான மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி குடியாத்தம் 8.6 மி.மீ மழையும், காட்பாடியில் 6.3 மி.மீ, மேல் ஆலத்தூரில் 49.4 மி.மீ, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 4.2 மி.மீ, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 86 மி.மீ, ஆம்பூரில் 33.4 மி.மீ, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 37 மி.மீ, நாட்றாம்பள்ளியில் 40.2 மி.மீ, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க் கரை ஆலை பகுதியில் 38 மி.மீ, வாணியம்பாடியில் 46 மி.மீ, திருப்பத்தூரில் 25.2 மி.மீ, ராணிப்பேட்டை மாவட்டம் அரக் கோணத்தில் 9.4 மி.மீ, ஆற்காட்டில் 2.1 மி.மீ, காவேரிப்பாக்கத்தில் 39 மி.மீ, வாலாஜாவில் 7.9 மி.மீ, அம்மூரில் 9 மி.மீ, சோளிங்கரில் 27 மி.மீ, மழை பதிவாகியுள்ளன.

தொடர் மழையால் கொடை யாஞ்சி பகுதி பாலாற்றில் நேற்று காலை நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல், பச்சக்குப்பம் பாலாற்றுப் பகுதியில் தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x