Published : 19 Jun 2014 09:52 AM
Last Updated : 19 Jun 2014 09:52 AM

திறனாய்வு தேர்வில் தங்கப் பதக்கம்: வேலூர் மாணவர் சாதனை

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகமும் மேக்மில்லன் பப்ளிசர்ஸ் நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுகளை நடத்துகின்றன. ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் நடத்தப்படும் தேர்வில் சார்க் நாடுகள் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. இதில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில பாட பிரிவில் வேலூர் ஐடா ஸ்கடர் பள்ளி மாணவர் தி.முகிலன் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

இந்தியா, பக்ரைன், வங்கதேசம், பூடான், இரான், இராக், குவைத், மாலத்தீவு, மொரீசியஸ், நேபாளம், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 16 நாடுகளை உள்ளடக்கிய மண்டல அளவில் முகிலன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். பதக்கம் பெற்ற மாணவரை பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x