Published : 11 Feb 2016 02:28 PM
Last Updated : 11 Feb 2016 02:28 PM
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு ‘எம்பிபிஎஸ்’ சீட்டுகளை அதிகரிக்கும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை எனக் கூறப்படுவதால் மாணவர்கள், பேராசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது 155 எம்பிபிஎஸ் ‘சீட்’கள் உள்ளன. இதை 250 ‘சீட்’களாக அதிகரிக்க கடந்த பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல் கூடுதலாக 95 சீட்டுகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. மத்திய அரசும், ஒப்புதல் அளித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வுக்கு அனுப்பியது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் இந்திய மருத்துவ கவுன்சில் குழு எந்நேரத்திலும் மதுரை மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கு வரலாம் என்றும், அதனால் நடப்பாண்டே முதலே 250 ‘சீட்’களுடன் மருத்துவக் கல்லூரி செயல்படும் எனவும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் நடந்த மருத்துவமனை பவள விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு முதல் 250 எம்பிபிஎஸ் சீட்டுகளாக அதிரிக்கப்படும். அதற்கான நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் நடப்பாண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் 250 சீட்டுகளாக அதிகரிக்கும் திட்டம் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது;
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி 1954-ல் 50 எம்பிபிஎஸ் சீட்டுகளுடன் தொடங்கப்பட்டது. அதன்பின் படிப்ப டியாக அதிகரிக்கப்பட்டு 175 சீட் வரை மாணவர் சேர்க்கை உயர்ந்தது.
ஒரு கட்டத்தில் கட்டிட வசதி, பேராசிரியர்கள் பற்றாக்குறையால் 155 ‘சீட்’களாக குறைந்தது. குறைந்த சீட்டுகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி 250 ஆக மாற்ற போராடி வருகிறோம். நடப் பாண்டு அதிகரிக்கப்படும் என நினைத்தநிலையில் மீண்டும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
மத்திய அரசு, கூடுதல் மாணவர்கள் படிக்க புது கட்டிடத்துக்கான நிதி தரும்பட்சத்திலேயே கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகளை நடை முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனால், நடப்பாண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகளை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என்றார்.
காரணம் என்ன?
உயர் அதிகாரி மேலும் கூறியது: சீட் அதிகரிக்கும்பட்சத்தில் போதிய வகுப்பறை, இருக்கை, ஆய்வுக்கூடங்கள் கல்லூரியில் இல்லை. 100 எம்பிபிஎஸ் சீட்டுகளில் 15 சதவீதம் மத்திய அரசு கோட்டாவுக்குஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 22 ‘சீட்’கள் மத்திய அரசு பரிந்துரை மூலம் நிரப்பப்படுகிறது. அதனால், மருத்துவ கவுன்சில் நடப்பாண்டு ஒப்புதல் அளித்தாலும் மருத் துவக் கல்லூரிக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே கூடுதல் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என தமிழக அரசு நினைக்கிறது. அண்மையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகள் அதிகரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை பாஜகவின் தேர்தல் பிரச்சாரமாகவே தமிழக அரசு கருதுகிறது. இதுவும் ‘சீட்’ அதிகரிப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT