Published : 26 Feb 2016 09:28 AM
Last Updated : 26 Feb 2016 09:28 AM
விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், அஇசமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் 2014-15-ம் ஆண்டுக்கான வரவு - செலவு தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் இதுவரை தாக்கல் செய்யவில்லை.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகள் ஆண்டுதோறும் தங்களது வரவு - செலவு தணிக்கை அறிக்கையை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பதிவு செய் யப்பட்ட அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் மாநிலத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதன்படி, 2014-15-ம் ஆண்டுக்கான வரவு செலவு தணிக்கை அறிக்கையை தேசியக் கட்சிகளான பாஜக-வும் காங்கிரஸும் இதுவரை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை. இரண்டாவது முறையாக கடந்த 20-01-16-ல் நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் இந்தக் கட்சிகள் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் மட்டும் குறித்த காலத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிகளான தேமு திக-வும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் கடந்த செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட்டில் தங்களின் வரவு செலவு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. அதிமுக, திமுக பாமக கட்சிகள் காலம் கடந்து கடந்த நவம்பரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
தமிழகத்தில் பதிவுபெற்று அங்கீகாரம் பெறாத கட்சிகளில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி இம்மூன்று கட்சிகள் மட்டுமே வரவு - செலவு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. இதில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி 2015-16-ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இவைகள் தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, சரத் குமாரின் அஇசமக, திருமாவளவனின் விடுதலைச் சிறுத் தைகள், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட பதிவுபெற்ற அங்கீகாரம் இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இதுவரை தங் களது வரவு - செலவு தணிக்கை அறிக் கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப் பிக்கவில்லை.
அறிக்கை தாக்கல் செய்யாத கட்சி கள் தேர்தலில் போட்டியிட சிக்கல் ஏதும் வருமா? என்று தேர்தல் ஆணைய வட் டாரத்தில் விசாரித்தபோது, எந்த மாநிலத்திலும் அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான எந்த முன்னுதார ணமும் இல்லை என்றனர்.
வரவு- செலவு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்துள்ள கட்சிகள் பற்றிய விவரங்கள் குறித்து கடந்த 10-ம் தேதி, சென்னையிலுள்ள வருமான வரித்துறை இயக்குநருக்கு (விசாரணைகள்) மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT