Published : 15 Sep 2021 07:37 PM
Last Updated : 15 Sep 2021 07:37 PM
திமுகவின் முப்பெரும் விழா இன்று மாலை சென்னையில் தொடங்கிய நிலையில், விருதுகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முன்னாள் முதல்வர் கருணாநிதி, முப்பெரும் விழாவைத் தொடங்கி நடத்தினார். இந்த ஆண்டும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக முப்பெரும் விழா இன்று (15.9.2021) காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முப்பெரும் விழா விருதுகளை வழங்கினார்.
இதில் பெரியார் விருது - மிசா பி.மதிவாணனுக்கும், அண்ணா விருது - தேனி எல்.மூக்கையாவுக்கும், கலைஞர் விருது- கும்மிடிப்பூண்டி கி.வேணுவுக்கும், பாவேந்தர் விருது- வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருது - பா.மு.முபாரக்குக்கும் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் ஆசிரியர் ‘முரசொலி’ செல்வம் எழுதிய “முரசொலி சில நினைவலைகள்” என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
விழாவுக்குப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையேற்றுப் பேசினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT