Published : 14 Sep 2021 06:47 PM
Last Updated : 14 Sep 2021 06:47 PM
காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 'அண்ணா பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக் காவலர் முதல் சிறைக் கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் உதவி படை தளபதி முதல் வட்டாரத் தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் 'தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்' வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (செப். 14) வெளியிட்டார்.
அதன்படி, காவல் துறையில்,
1. பகலவன், துணை ஆணையர், திருவல்லிக்கேணி, சென்னை.
2. எம்.சுதாகர், எஸ்.பி., காஞ்சிபுரம்.
3. மீனா, துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு - 2, சென்னை.
4. சண்முகம், டிஎஸ்பி, ஆயுதப்படை, காஞ்சிபுரம்.
5. ஜெகதீசன், காவல் ஆய்வாளர், கொரட்டூர் காவல் நிலையம், சென்னை.
6. கனிமொழி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு தலைமையகம், சென்னை.
7. பிரதாபன், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன், ஆவடி.
8. பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர், செம்பியம் காவல் நிலையம், சென்னை.
9. ராஜா சிங், சப்-இன்ஸ்பெக்டர், வில்லிவாக்கம் காவல் நிலையம், சென்னை.
10. நெடுமாறன், சப்-இன்ஸ்பெக்டர், செங்கல்பட்டு.
11. பிரேமநாத், சப்-இன்ஸ்பெக்டர், கடலோரப் பாதுகாப்புப் படை, சென்னை.
12. குறிஞ்சிசெல்வன், சப்-இன்ஸ்பெக்டர், கடலோரப் பாதுகாப்புப் படை, சென்னை.
13. அ.முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு போலீஸ் அகாடமி, சென்னை.
14. பழனி, சப்-இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு கமாண்டோ ஸ்கூல், சென்னை.
15. சங்கரன், சப்-இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு கமாண்டோ படை, சென்னை.
16. சேகர ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு கமாண்டோ படை, சென்னை.
17. பி.ராதாகிருஷ்ண ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு கமாண்டோ ஸ்கூல், சென்னை.
18. முனுசாமி, எஸ்.எஸ்.ஐ, லஞ்ச ஒழிப்புப் பிரிவு, சென்னை.
19. சுப்பிரமணி, எஸ்.எஸ்.ஐ., வணிக குற்றப்பிரிவு, சென்னை.
20. ஜி.சி.சகாயராஜ், எஸ்.எஸ்.ஐ., க்யூ பிரிவு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 100 பேருக்கு 'அண்ணா பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT