Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூரில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமான குழலாம்பிகை உடனுறை ஆப்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பேசிய மதுரை ஆதீனம்.
தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை இன்றைய தலைமுறை பாதுகாக்க வேண்டும். வெளிநாட்டு மோகம் அதிகரிப்பால் தேசபக்தி குறைந்து வருகிறது. கிராமங்களில் பண்பாடு, இயற்கை சார்ந்த விஷயங்கள் நிரம்பிக் கிடப்பதால், கிராமங்களை பாதுகாக்க வேண்டும். கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், உடைமைகளை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமை வகித்தார்.
திருப்பராயத்துறை தபோவனம் ஸ்ரீமத் சுவாமி நியமானந்தா மகராஜ், திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசு தேசிய மகா சுவாமிகள், கருமாத்தூர் விவேகானந்த ஆசிரம ஸ்ரீமத் சதா சிவானந்தா மகராஜ், ராமேசுவரம் ராமகிருஷ்ண ஆசிரம ஸ்ரீமத் பிரணவானந்தா மகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆப்பனூர் ராமகிருஷ்ண ஆசிரமம் கைலாசானந்தா வரவேற்றார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் விவேகானந்த ஆசிரம ஸ்ரீமத் ஞானேஸ்வரானந்தா மகராஜ், கரூர் விவேகானந்தா ஆசிரம ஸ்ரீமத் யோகேஸ்வரானந்தா மகராஜ், காமாட்சிபுரி ஆதீனம் கோளறுபதி நவகிரக கோட்டை பராசக்தி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT