Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM

எங்கள் கைங்கர்யத்துக்கு பாதிப்பு ஏற்பட கூடாது: ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு அளிப்பு

திருச்சி

ஆண்டாண்டு காலமாக கோயில் களில் நாங்கள் செய்து வரும் கைங்கர்யத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்று கோரி மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு விடம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் அதைச் சார்ந்த கோயில்களின் பட்டர்கள் நேற்று மனு அளித்தனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்ச கராகலாம் என்ற திட்டத்தின் கீழ் கோயில்களில் அர்ச்சகர்களை அரசு நியமித்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் அதைச் சார்ந்த கோயில்களின் மிராஸ் கைங்கர்யபரர்களின் நலச் சங்கத்தின் தலைவர் ஆர்.முரளிதரன் பட்டர், செயலாளர் பி.ஜெகந்நாத பட்டர், பொருளாளர் கே.முத்துக்கிருஷ்ணன் பண்டாரி உள்ளிட்டோர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கா ரங்கா கோபுரம் அருகே அமைச்சர் கே.என்.நேரு விடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

மனு விவரம்:

ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ச்சகர் கள், பண்டாரிகள், அரையர்கள், ஸ்தானிகர், ஊழியர், வைஷ்ணவர் என 160 பேர், திருவெள்ளறை கோயிலில் அர்ச்சகர்கள், பண்டாரிகள், ஸ்தானிகர், தீர்த்தக் காரர்கள் என 155 பேர், உறையூர் கோயிலில் ஸ்தலத்தார், ஊழியர், வைஷ்ணவர் என 15 பேர் என மொத்தம் 330 பேர் தலைமுறை தலைமுறையாக பெருமாளுக்கு நைவேத்யமும், கைங்கர்யமும் செய்து வருகிறோம்.

நாங்களும், எங்கள் வாரிசுகளும் தொடர்ந்து கைங்கர்யங்கள் செய்வதற்கு எவ்வித பாதகமும் ஏற்படாமல் இருக்கும் வகையில், எங்கள் கோரிக்கையை முதல் வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப் பிடப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, அதை முதல்வரிடம் அளிப்பதாக உறுதி அளித்தார்.

இதுகுறித்து பட்டர்கள் கூறும் போது, “நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்க வேண்டும் என்று கோயில்களில் ஆண்டாண்டு காலமாக பூஜை, வழிபாடுகளை செய்து வருகிறோம். இதைத் தவிர, எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை. பூஜை ஒன்றையே உயிர் மூச்சாகக் கருதி இறுதிக்காலம் வரை வழிபாட்டை செய்து வருகிறோம். எங்கள் பூஜை வழிபாட்டுக்கு இடையூறு இல்லாமல், தொடர்ந்து நாங்கள் பூஜை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x