Published : 01 Feb 2016 10:40 AM
Last Updated : 01 Feb 2016 10:40 AM
இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை சில உறவுகள் வேண்டா வெறுப்பாகத் தான் நடத்துகின்றன. அதையெல் லாம் சகித்துக்கொண்டு எதிர்நீச்சல் போட்டு முன்னேற துடிக்கிறார்கள் அவர்கள். இதற்கு உதாரணம் தில்லைமணி கருப்பன்.
ராமேசுவரம் அடுத்த தங்கச்சி மடத்தை சேர்ந்த 36 வயது இளை ஞர் தில்லைமணி கருப்பன். ஒன் றரை வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் முடங்கிப் போனவர். இது பழங் கதை. இப்போது அது மாறிவிட்டது. ராமேசுவரம் பகுதியில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக் கும் இவர்தான் இப்போது ஆபத் பாந்தவன். மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பது, அரசு உதவித் தொகை, பென்ஷன் உள்ளிட்டவற்றை போராடி வாங்கித் தருவது, வேலைவாய்ப்பு தேடித்தருவது என மாற்றுத் திறனாளிகளின் நேசராய் சுழல்கிறார் தில்லைமணி. இவரது சாதனைகளுக்காக விவேகானந்தர் விருதும் வாங்கியிருக்கிறார்.
‘‘அப்போ, தங்கச்சிமடத்தில என்னோட சேர்த்து மொத்தம் 15 பிள்ளைங்க போலியோவால பாதிக்கப்பட்டோம். அதுல 7 பேர் இப்ப உயிரோட இல்ல. எஞ்சியிருக் கிற எங்க நிலமையும் ரொம்ப பரிதாபம். கால் செயலிழந்து உயிர் மட்டும் பிழைச்சுக்கிட்ட என்னை என் சொந்தங்களே ஒதுக்கி வைச்சிட்டாங்க.
கஷ்டப்பட்டு வளர்ந்து ஆளா னேன். சென்னையில ஒரு மருந்து கம்பெனியில வேலை பார்த்துட்டு நாலஞ்சு வருஷம் முன்பு சொந்த ஊருப் பக்கம் வந்தேன். என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் அரசு நலத்திட்டங்களை பெறுவதற்காக அலைக்கழிக்கப்படுவதைப் பார்த்து வேதனைப்பட்டேன்.
ராமநாதபுரம் மாவட்டத்துல மட்டும் 25,366 மாற்றுத் திறனாளிகள் இருப்பதா பட்டியல் கொடுத்தாங்க. அவங்க எல்லோருக்கும் உதவி பண்ண முடியாதுன்னாலும் ராமேசு வரம் தீவு பகுதியில இருக்கவங் களுக்கு மட்டுமாச்சும் உதவி செய் யலாம்னு களத்துல இறங்கினேன். அதுக்காக, தீவு பகுதியில இருக்கிற 300 மாற்றுத் திறனாளிகளை ஒருங் கிணைச்சு ‘சுயசக்தி’ என்ற அமைப்பை உருவாக்கினேன்.
அதிகாரிகளை அணுகி, ‘சுய சக்தி’ உறுப்பினர்களுக்கு அரசின் அனைத்து உதவிகளையும் ஒவ் வொண்ணா வாங்கிக் கொடுத்தேன்.
மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பல திட்டங்களை அறிவிக்குது. ஆனா, சில அதிகாரிகளுக்கு அதை செயல்படுத்த மனசில்ல. அதனால, எங்களை இழுத்தடிக்கிறாங்க. சிலர் எங்களிடம் லஞ்சமும் கேக் குறாங்க.
தங்கச்சிமடத்துல சின்னதா ஒரு பெட்டிக்கடை வைச்சிருக்கேன். அதுதான் எனக்கு வாழ்வாதாரம். அதிகாலை 5 மணிக்கு கடைய திறப்பேன். காலை 9.30 மணிக் கெல்லாம் கடையை பூட்டிட்டு, கிளம்பிருவேன். அப்புறம் பொது சேவைதான். மீண்டும் மாலை 5.30 முதல் 8.30 வரை கடையை திறந்து பார்த்துக்குவேன்.
யாருக்கிட்டயும் மாற்றுத் திற னாளிகள் கையேந்தி நிக்காம, சுயமாக உழைத்து பிழைக்கணும். அதுக்காக ஆரம்பிச்சதுதான் ‘சுயசக்தி’. எங்கள் உறுப்பினர்கள் சிப்பி, சங்கு இவற்றைக் கொண்டு அலங்கார விளக்கு, மாலை, பொம்மை, சாவிக்கொத்து தயா ரிச்சு விற்பனைக்குத் தருவாங்க. இவற்றின் செய்முறை குறித்து பள்ளி, கல்லூரிகளில் உதவித் தொகை வாங்கிட்டு பயிற்சி வகுப்பு நடத்துவோம். சில மாற்றுத் திறனாளிகளுக்கு திருப்பூர் பனி யன் கம்பெனிகளில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கேன்.
எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கக்கூட சொந்தத்துல ஆள் இல்லை. நானேதான் பண்ணிக்கிட் டேன். எங்கள் அமைப்பை சேர்ந்த 6 பேருக்கு கல்யாணம் செஞ்சு வைச்சேன். மாற்றுத் திறனாளிகளை உறவுகள் வெறுக்கின்றன. இப் படிப்பட்ட இரக்கமில்லாத மனு ஷங்க மத்தியில மாற்றுத் திறனா ளிகள் கவுரவமா வாழ்ந்துகாட்ட ணும்னு எனக்குள்ள ஒரு வைராக் கியம். அதுக்காக உடம்புல தெம்பு இருக்கிற வரை உழைப்பேன்.. உறுதியுடன் கூறுகிறார் தில்லை மணி கருப்பன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT